• February
    18
    Tuesday

Main Area

Main



அடப்பாவிகளா அதுக்குள்ளயா? லாஸ்லியா ஆர்மி குறித்து பிரபல காமெடி  நடிகர் ட்வீட்! 

லாஸ்லியா
லாஸ்லியா

சென்னை: நடிகர் சதிஷ்,லாஸ்லியா ஆர்மி குறித்து  ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். 

ரியாலிட்டி ஷோகளில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்றால் பிக் பாஸ் தான். அனைத்து தரப்பு மக்களும் விரும்பி பார்க்கும் இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அப்படி ரசிகர்களுக்கு மிகவும் எதிர்பார்த்திருந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சி சமீபத்தில் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வாரம் முடிவுயடைவதற்குள் அதில் வரும் ஸ்ரீலங்கா செய்தியாளர் லாஸ்லியாவுக்கு, ரசிகர்கள் ஆர்மி உருவாக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி அவரை பற்றி நாள்தோறும் மீம்ஸ், மற்றும் கவிதைகளும் வெளியாகிறது. 

இவர்களின் ட்வீட்களை பார்த்த மக்கள்,போற்றப் போக்கைப் பார்த்தா அவருக்குத் தமிழ் நாட்டுல கோவில் கட்டினாலும் காட்டுவார்கள் என்று கலாய்த்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து நகைச்சுவை நடிகர் சதீஷ் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'அடப்பாவிகளா அதுக்குள்ள ஆர்மியா'? என்று குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக சதிஷ் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் குறித்து அடிக்கடி ட்வீட் வெளியிடுவதும், அவர்களை விமர்சனம் செய்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

2018 TopTamilNews. All rights reserved.