தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம்: குற்றவாளிகள் தப்பிச்செல்ல முயற்சி! துரத்திப்பிடித்த சிபிசிஐடி

 

தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம்: குற்றவாளிகள் தப்பிச்செல்ல முயற்சி! துரத்திப்பிடித்த சிபிசிஐடி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையை கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி இந்த வழக்கில் 24 மணி நேரமாக அதிரடி விசாரணை மேற்கொண்ட போலீசார், கிடைக்கப்பெற்ற சாட்சியங்களின் அடிப்படையில் 5 காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய உத்தரவு பிறப்பித்தனர். அதன் படி இன்று காலை 6:30 மணிக்குள் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம்: குற்றவாளிகள் தப்பிச்செல்ல முயற்சி! துரத்திப்பிடித்த சிபிசிஐடி

இந்நிலையில் சாத்தான்குளம் காவல் நிலைய விசாரணையின்போது தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் இதுவரை கைதான காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் தலைமைக் காவலர் முருகன் ஆகியோரிடம் தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று ரகு கணேஷ் கைதுக்குப் பிறகு காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகிய இருவரும் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். விசாரணையின்போது தப்பிச் செல்ல முயன்ற தலைமைக் காவலர் முருகனை சிபிசிஐடி போலீசார் ஓடிச்சென்று பிடித்துள்ளனர். பாலகிருஷ்ணன் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தப்பி செல்ல முயன்றுள்ளார் அவரையும் சிபிசிஐடி போலீசார் பிடித்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.