சாத்தான்குளம் விவகாரம்: பணியிட மாற்றம் என்பது தண்டனை இல்லை… கனிமொழி கண்டனம்!

 

சாத்தான்குளம் விவகாரம்: பணியிட மாற்றம் என்பது தண்டனை இல்லை… கனிமொழி கண்டனம்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை, மகன் கோவில்பட்டி கிளைச்சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தண்டனை இல்லை, அவர்களை சஸ்பெண்ட் செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று தி.மு.க எம்.பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

சாத்தான்குளம் விவகாரம்: பணியிட மாற்றம் என்பது தண்டனை இல்லை… கனிமொழி கண்டனம்!
தி.மு.க எம்.பி கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் உயிரிழந்திருக்கின்றனர். காவல்துறையினர் தாக்கியதில் இந்த உயிரிழப்பு நடந்திருக்கும் என பலத்த சந்தேகம் எழுகிறது. இந்த சம்பவத்தை முறையாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளேன். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.


சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இருவர் உயிரிழந்த சம்பவத்தில் எஸ்.ஐ. இருவர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பது தண்டனை அல்ல. இந்த சம்பவம் காவல்துறை நிகழ்த்தியிருக்கும் வன்முறை என்பது தெளிவாகத் தெரிகிறது. உடனடியாக இருவரையும் பணியிடை நீக்கம் செய்து, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்ட ட்வீட் பதிவில், “தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தையும் மகனுமான ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வு கடும் கண்டனத்திற்குரியது.


காவல்துறையினர் தாக்கியதால்தான் இருவரும் பலியாகியிருப்பதாக வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இதுகுறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
வணிகர்களின் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதுடன், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.