சாத்தான்குளம் விவகாரம்: மேலும் ஐந்து போலீசாரை கைது செய்யத் திட்டம்?

 

சாத்தான்குளம் விவகாரம்: மேலும் ஐந்து போலீசாரை கைது செய்யத் திட்டம்?

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மேலும் ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சாத்தான்குளம் விவகாரம்: மேலும் ஐந்து போலீசாரை கைது செய்யத் திட்டம்?சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பெனிக்ஸ் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்ததால் கொந்தளிப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை அடித்துக் கொன்றதாக குற்றச்சாட்டு எழவே, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுத்தது. இதனால், இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றத் தமிழக அரசு முடிவு செய்தது. முதல்வரின் கோரிக்கையை ஏற்று சி.பி.ஐ விசாரணை நடத்தும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகமும் உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் விவகாரம்: மேலும் ஐந்து போலீசாரை கைது செய்யத் திட்டம்?சி.பி.ஐ விசாரணையில் இறங்கும் வரை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அவர்கள் விசாரணையில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டராக இருந்த ஶ்ரீதர் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். நேற்று சிறப்பு உதவி இன்ஸ்பெக்டர் உள்ளிட்டவர்களிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து முடித்தனர். இதைத் தொடர்ந்து சாத்தான்குளத்தில் பணியாற்றி வந்த மேலும் ஐந்து போலீசாரை கைது செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

சாத்தான்குளம் விவகாரம்: மேலும் ஐந்து போலீசாரை கைது செய்யத் திட்டம்?இது தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவு கிடைத்தவுடன் கைது நடவடிக்கை தொடங்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.ஐந்து போலீசாரை கைது செய்வது தொடர்பான நடவடிக்கைகள் தாமதமாவதைத் தொடர்ந்து அவர்கள் ஐந்து பேரையும் மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளதாகவும், விசாரணை முடிந்த பிறகு அவர்கள் கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.