சாத்தான்குளம் தந்தை மகன் கொலை : காவலர்கள் முத்துராஜ், முருகனுக்கு கொரோனா!

 

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை : காவலர்கள் முத்துராஜ்,  முருகனுக்கு கொரோனா!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையைக் கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணை செய்த போது, கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை : காவலர்கள் முத்துராஜ்,  முருகனுக்கு கொரோனா!

அதன் பின்னர் இந்த வழக்கை சிபிஐ போலீசார் கையில் எடுத்த நிலையில், முதலில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களையும் காவலில் எடுத்து தனித்தனியாக வாக்குமூலம் பெற்றனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் 2 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மேலும் 3 அதிகாரிகளுக்கு கொரோனா உறுதியாகியது. அதுமட்டுமில்லாமல், கைதான உதவி காவல் ஆய்வாளர் பால்துரைக்கும் கொரோனா உறுதியானது.  டெல்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகளுக்கு உதவிய மதுரை அதிகாரிக்கும் நேற்று கொரோனா உறுதியாகியது.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை : காவலர்கள் முத்துராஜ்,  முருகனுக்கு கொரோனா!

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைதான காவலர்கள் முத்துராஜ், முருகனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஏற்கனவே முத்துராஜ், முருகனை விசாரித்த டெல்லி சிபிஐ அதிகாரிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள முத்துராஜ் ,முருகனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.