விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை -மகன் மரணம் : பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதா? பரபரப்பு தகவல்!

 

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை -மகன் மரணம் : பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதா? பரபரப்பு தகவல்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். இவர் கடந்த 20 ஆம் தேதி முழு பொதுமுடக்கம் நடைமுறைகளை மீறி நீண்ட நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக தெரிகிறது. இதனால் சாத்தான்குளம் போலீசார் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனும், ரகுகணேஷ் ஆகிய இருவரும் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் கடுமையாகத் தாக்கியதுடன், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். இதையடுத்து காயம் காரணமாக ஜெயராஜ் மருத்துவச் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை -மகன் மரணம் : பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதா? பரபரப்பு தகவல்!

இதையடுத்து கோவில்பட்டி கிளைச்சிறையில் இருந்த பென்னிக்ஸ் உயிரிழக்க, ஜெயராஜ் மருத்துவமனையில் பலியானார். போலீசாரின் தாக்குதலால் தான் இரண்டு உயிரிழப்புகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல் இந்த சம்பவத்திற்கு  வியாபாரிகள் சங்கம் சார்பாக சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதிகளில் கடையடைப்பு செய்து வணிகர்கள் போராட்டம் செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை -மகன் மரணம் : பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதா? பரபரப்பு தகவல்!

இதுகுறித்து தி ஃபெடரல் சிறப்பு செய்தி பதிவுக்கு நண்பர் ராஜ்குமார் அளித்துள்ள பேட்டியில், “20 ஆம் தேதி காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை குறைந்த பட்சம் ஏழு முறை தந்தையும் மகனும் லுங்கிகளை மாற்றினார்கள். அவர்களின் ஆசன பகுதியில் இருந்து ரத்தம் வடிந்தது. இதனால் அவர்கள் உடல்நிலை ஈரமாக காணப்பட்டது, இதைத்தொடர்ந்து சாத்தான்குளம் மருத்துவமனைக்கு அவர்கள் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறிய போலீசார் அவர்களை உங்கள் வாகனத்தில் அழைத்து வாருங்கள் என்று சொன்னார்கள். அதனால் அவர்களுக்கு வலிக்காமல் இருப்பதற்காக நாங்கள் பல ஆடைகளை கீழே போட்டு அவர்களை அமர வைத்தோம். உடலில் ரத்தம் கசிந்த வண்ணம் இருந்தது. அவர்களின் ஆடைகள் கிழிக்கப்பட்டு இருந்தது. ஆசன பகுதியில் கடுமையான வலி இருந்ததாக அவர்கள் எங்களிடம் கூறினார்கள். ஆனால் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் உடல் தகுதி சான்றிதழ் கொடுக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். ரத்த அழுத்தமானது ஜெயராஜுக்கு 192 மகனுக்கு 184 இருந்தது. ரத்தக் கசிவு நிற்பதற்கு மருந்து கொடுக்குமாறு போலீசாரிடம் நாங்கள் கேட்டோம். ஆனால் அவர்கள் அது தானாகவே நின்று விடும் என்று கூறிவிட்டனர். இதையடுத்து ஜெயராஜின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட பென்னிக்ஸ் ரத்தம் வடிய நிர்வாணமாக இருந்தார்” என அவரது நண்பர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை -மகன் மரணம் : பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதா? பரபரப்பு தகவல்!

முன்னதாக சாத்தான்குளத்தில் இருந்த அனைத்து காவலர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இரண்டு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்ற அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.