“சாத்தான்குள வழக்கில் சிபிஐ கொடுத்த புதிய தகவல்”.. காவலர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள்

“சாத்தான்குள வழக்கில் சிபிஐ கொடுத்த புதிய தகவல்”.. காவலர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்திருந்ததாக தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவலர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் பூதாகரமாக உருவெடுத்ததை தொடர்ந்து, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். முதலில் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த இந்த வழக்கு, தமிழக அரசின் கோரிக்கைக்கு இணங்க சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

“சாத்தான்குள வழக்கில் சிபிஐ கொடுத்த புதிய தகவல்”.. காவலர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள்

அதன் பிறகு பல தரப்பினரிடம் விசாரணை, ஆவணங்கள் சேகரிப்பு என இந்த கொலை வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா உறுதியானதால் வழக்கு கிடப்பில் போடப்பட்டது. அந்த சமயம் பார்த்து, கைதான காவலர்கள் தாமஸ் பிரான்சிஸ் மற்றும் முத்துராஜ் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, காவலர்களுக்கு ஜாமீன் கொடுக்க சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே இந்த வழக்கில் கைதான காவலர் பால்துரை உயிரிழந்தார்.

“சாத்தான்குள வழக்கில் சிபிஐ கொடுத்த புதிய தகவல்”.. காவலர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள்

இந்த நிலையில் இன்று மீண்டும் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது பென்னிக்ஸ் உடலில் 13 இடத்திலும், ஜெயராஜ் உடலில் 17 இடத்திலும் படுகாயம் இருந்ததாகவும், மோசமான காயங்களால் தான் அவர்கள் உயிரிழந்ததாகவும் பிரேத பரிசோதனையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இதுவரை 35 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டிருப்பதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், காவலர் முருகன் உட்பட 3 பேருமே இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகள் என கூறி தாமஸ் பிரான்சிஸ் மற்றும் முத்துராஜின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.