சாத்தான்குளம் வழக்கு: நவ.11ம் தேதி முதல் கீழமை நீதிமன்றத்தில் விசாரணை!

 

சாத்தான்குளம் வழக்கு: நவ.11ம் தேதி முதல் கீழமை நீதிமன்றத்தில் விசாரணை!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், நவ.11ம் தேதி முதல் விசாரணை தொடங்கவிருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்த விவகாரத்தில் 10 போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுள் ஒருவரான காவலர் பால்ராஜ் அண்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, சிறையில் இருக்கும் 9 காவலர்களுக்கும் ஜாமீன் கிடைக்காத வண்ணம் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

சாத்தான்குளம் வழக்கு: நவ.11ம் தேதி முதல் கீழமை நீதிமன்றத்தில் விசாரணை!

மேலும், காவலர்களின் கொடூரத் தாக்குதலால் தான் அவர்கள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்ததாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த நிலையில், சாத்தான்குள தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் வரும் நவ.11ம் தேதி முதல் கீழமை நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கவிருப்பதாக நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எஸ்.ஐ ரகுகணேஷ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு விசாரணையின் போது, சிபிஐ இந்த தகவலை தெரிவித்துள்ளது.