சாத்தான்குளம் விவகாரம்: விசாரணையை தொடங்குகிறது சிபிசிஐடி!

 

சாத்தான்குளம் விவகாரம்: விசாரணையை தொடங்குகிறது சிபிசிஐடி!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இருக்கும் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல்துறையினரால் தாக்கப்பட்டு சிறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக்கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. அதில் இன்று நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார். அந்த அறிக்கையில், இருவரின் உடலில் அதிக அளவு காயம் இருந்தது. இதனால் சாத்தான்குளம் காவலர்கள் மீது வழக்குப்பதிவு முகாந்திரம் உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், காவலர்கள் கொடுத்த அறிக்கைக்கும் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு மாறுபாடுகள் அதிகமாக இருப்பதால் இனிமேல் ஒரு நொடி கூட இனிமேல் வீணாகக் கூடாது என்றும் நெல்லை சரக டிஐஜி வழக்கு விசாரணையை ஏற்க இயலுமா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சாத்தான்குளம் விவகாரம்: விசாரணையை தொடங்குகிறது சிபிசிஐடி!

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில் நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினபு அவர்களிடமிருந்து சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் பெற்றுக்கொண்டார். இதன்படி தற்போது முதல் சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்குகிறது.