சாத்தான்குள விவகாரம் : மேலும் 5 காவலர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு!

 

சாத்தான்குள விவகாரம் : மேலும் 5 காவலர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல்துறையினரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் 5 பேர் மீது இரட்டைக் கொலை வழக்கு பதிந்து, அவர்களை அதிரடியாக கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து சாத்தான்குள காவல்நிலையத்தில் பணியாற்றிய மேலும் 5 காவலர்கள் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

சாத்தான்குள விவகாரம் : மேலும் 5 காவலர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு!

இதனிடையே இந்த வழக்கை விசாரிக்குமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்ததின் பேரில், சிபிசிஐடி போலீசாரிடம் இருந்து அனைத்து ஆவணங்களையும் பெற்ற சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கு விசாரணையை கையில் எடுத்தனர். தொடர்ந்து, முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட 5 காவலர்களையும் 3 நாட்கள் காவலில் எடுத்து தனித்தனியாக வாக்குமூலம் பெற்றனர். அதே போல, மேலும் 5 காவலர்களிடமும் விசாரணை செய்ய உள்ளதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக கைது செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ பால்துரை, காவலர்கள் சமயதுரை, செல்லதுரை, வெயில்முத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று சிபிஐ மனுதாக்கல் செய்கிறது.