மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு சத்குரு இரங்கல்!

 

மறைந்த  பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு சத்குரு இரங்கல்!

பணிவிற்கும் எளிமைக்கும் கொண்டாடப்பட்டவர் எஸ்பிபி என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு புகழாரம் சூட்டியுள்ளார்.

மறைந்த  பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு சத்குரு இரங்கல்!

இந்திய இசை உலகின் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நலக் குறைவால் நேற்று நேற்று காலமானார். அவரின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கத்தில் இன்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் எஸ்பிபி மறைவுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் , “எஸ்பிபி பன்முகத்தன்மை கொண்ட தன் மெல்லிசை குரலால் கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்த வித்தகர். மக்கள் கொண்டாடிய செழுமையான கலைஞர். அவரது கலைக்காக நேசிக்கப்பட்டதை போல பணிவிற்கும் எளிமைக்கும் கொண்டாடப்பட்டவர். அவரது குடும்பத்தினர் நண்பர்கள் ரசிகர்களுக்கு நமது இரங்கல்கள்” என்று பதிவிட்டுள்ளார்.