சாத்தான்குளம் தந்தை-மகன் மரண விவகாரத்தில் வழக்கு பதிந்தது சிபிசிஐடி!

பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று கூறியுள்ளது.

தமிழகத்தையே உலுக்கியுள்ள சாத்தான்குளம் விசாரணை கைதிகளான தந்தை – மகன் இருவரும் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்ட அவர்கள் ஆசனவாயில் ரத்தம் சொட்டிய படி உடலில் பல காயங்களுடன் இறந்தனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்து வந்த உயர்நீதி மன்ற மதுரைகிளை தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என தெரிவித்துள்ளது. முதல் தகவல் அறிக்கை மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகளின் முரண்பாடு இருக்கிறது. உடலில் மோசமான காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. எனவே பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று கூறியுள்ளது.

இந்த வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில் நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினபு அவர்களிடமிருந்து சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் பெற்றுக்கொண்டார். இதன்படி தற்போது முதல் சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை-மகன் மரண விவகாரத்தில் சிபிசிஐடி வழக்கு பதிந்துள்ளது. வழக்கின் ஆவணங்களை பெற்ற டிஎஸ்பி அனில்குமார் சிபிசிஐடி வழக்கு 1,2 என பதிவு செய்துள்ளார்.

- Advertisment -

Most Popular

பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகன் காலமானார்!

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகனும், முதுபெரும் தமிழறிஞரும் விடுதலைப்போராட்ட வீரருமான, தமிழ்மாமணி மன்னர் மன்னன் என்கிற கோபதி, இன்று பிற்பகலில் புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 92. இந்தத் தகவலை...

கொரோனாவின் கோரதாண்டவம்… மாவட்ட வாரியான ரிப்போர்ட்!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 3,827 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர்...

தமிழகத்தில் இன்று மேலும் 3,827 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 1,14,978 ஆக உயர்வு!!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியே 15 லட்சத்து 90ஆயிரத்து 635ஆக அதிகரித்துள்ளது. 5 லட்சத்து 37ஆயிரத்து 436 பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை...

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட புதுக்கோட்டை சிறுமியின் குடும்பத்திற்கு விஜய் மக்கள் மன்றத்தினர் ரூ.50000 நிதியுதவி

அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து ரூபாய் 50 ஆயிரம் மாவட்ட தளபதி விஜய் மக்கள் மன்றம் சார்பாக வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம்...
Open

ttn

Close