சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ-க்களை ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டம்!

 

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ-க்களை ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டம்!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்களை ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஶ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் அனைவரையும் கைது செய்துவிட்டோம் என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் அறிவித்தனர். தற்போது மற்றொரு காவலர் முத்துராஜை தீவிரமாகத் தேடி வருகின்றோம் என்று கூறுகின்றனர்.

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ-க்களை ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டம்!பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைச் சார்ந்த நான்கு பேர் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களையும் கைது செய்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளனர். தற்போது முதற்கட்ட விசாரணை முடிந்து அனைவரும் ரிமாண்ட் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணையின் போது சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் “காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வருபவர்களை தாக்குவது போலத்தான் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது தாக்குதல் நடத்தினோம். இப்படி ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை.

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ-க்களை ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டம்!

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவேன் என்று நினைத்துக் கூட பார்த்தது இல்லை. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஒவ்வொருவருக்கும் உதவ மிகப்பெரிய பின்னணி உள்ளது. ஆனால், நான் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவன். காவலராக தேர்வாகி பிறகு எஸ்.ஐ தேர்வில் பங்கேற்று எஸ்.ஐ ஆனேன். என்னுடைய எதிர்காலத்தை நினைத்தாலே பயமாக உள்ளது” என்று கூறியுள்ளார். அவரை சமாதானம் செய்து அவரிடம் இருந்து தகவலை பெற்றுள்ளனர்.
இருப்பினும் இந்த வழக்கு விசாரணைக்கு இது போதுமானது இல்லை. எனவே, கைது செய்யப்பட்ட அனைவரையும் ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனுத் தாக்கல் செய்யப்படும் என்று சிபிசிஐடி வட்டாரங்கள் கூறுகின்றன. வழக்கு சி.பி.ஐ கைகளுக்கு செல்வதற்கு முன்பு முழுமையாக முடித்துவிட வேண்டும் என்று சிபிசிஐடி அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.