“சசிகலாவின் வருகை திமுகவின் வெற்றியை பாதிக்காது” – ஜவாஹிருல்லா

 

“சசிகலாவின் வருகை திமுகவின் வெற்றியை பாதிக்காது” – ஜவாஹிருல்லா

கோவை

சசிகலாவின் வருகை, திமுக கூட்டணியின் வெற்றியை எந்த விதத்திலும் பாதிக்காது என மனிதநேய மக்க கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

கோவை ஆத்துப்பாலம் பகுதியில் நடந்த கட்சியின் பொக்குழு கூட்டத்தில் பங்கேற்ற ஜவாஹிருல்லா, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, முதலமைச்சர் கோவை வருகையின்போது, அதிமுக அரசு இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு தருவதாக கூறியது நகைப்புக்கு உரியது என்று கூறினார்.

“சசிகலாவின் வருகை திமுகவின் வெற்றியை பாதிக்காது” – ஜவாஹிருல்லா

மேலும், சிஏஏ சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தை கூட்டி அரசாணை வெளியிட வேண்டுமென்ற தங்களின் கோரிக்கையை முதல்வர் நிராகரித்ததாகவும், அதேபோல் போராட்டக்கார்கள் மீது போட்டப்பட்ட வழக்குகளை திரும்ப பெறவும் அரசுக்கு மனமில்லை என்றும் கூறினார்.தொடர்ந்து பேசிய ஜவாஹிருல்லா, திமுக ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

ஆனால், அதிமுக அரசு மக்களை ஏமாற்ற ஜிகினா வேலைகளை பார்த்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.மேலும், சசிகலாவின் வருகை திமுக கூட்டணியின் வெற்றியை எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும், மனிதநேய மக்கள் கட்சி கடந்த காலங்களில் தனி சின்னத்திலேயே போட்டியிட்டதாகவும் தெரிவித்தார்.