“சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது”

“சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது”

திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

“சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது”

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “சாத்தூர் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிய வந்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெற்றி சூரியனைப் போல பிரகாசமாக உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும். திமுக தலைவர் ஸ்டாலின் திறமையாகவும், நல்ல முறையிலும் திட்டங்களை வகுத்து மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார். மக்கள் மத்தியில் தற்போது உள்ள அதிமுக அரசை துரத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளார்கள். காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஏற்பட வாய்ப்பு இல்லை” என்றார்.

“சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது”

தொடர்ந்து பேசிய அவரிடம் சசிகலாவின் வருகை குறித்து எழுப்பிய கேள்விக்கு, சசிகலா வருகையால் தமிழக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் ஆளும் கட்சியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.