“சசிகலா விடுதலை” அதிமுகவுக்கு பாதிப்பில்லை : அமைச்சர் உறுதி!

 

“சசிகலா விடுதலை” அதிமுகவுக்கு பாதிப்பில்லை : அமைச்சர் உறுதி!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அரசின் தலையீடு இல்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கர்நாடக நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனைமற்றும் ரூ.10 கோடி அபராதம் விதித்தது. அதன் படி 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் தண்டனை காலம் முடியவுள்ள நிலையில் சசிகலா ஜனவரி மாதம் 17 ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று கர்நாடக சிறைத்துறை தெரிவித்திருந்தது. இருப்பினும் சசிகலா விடுதலை குறித்து இன்னும் எந்த தகவலும் தகவலும் உறுதிப்பட தெரியவில்லை.

“சசிகலா விடுதலை” அதிமுகவுக்கு பாதிப்பில்லை : அமைச்சர் உறுதி!

இந்த சூழலில் 1994-95 ம் ஆண்டில் வருமான வரி குறித்து தாக்கல் செய்ததில் சசிகலா ரூ.4 லட்சத்தை குறைத்து மதிப்பிட்டதாக தொடர்ந்த வழக்கு விசாரணையில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா வரும் ஜனவரி 27-ம் தேதி விடுதலைஆகவுள்ளார். இதனால் அவரிடம் விளக்கம் பெற கால் அவகாசம் சசிகலா தரப்பு வழக்கறிஞரால் உயர் நீதிமன்றத்தில் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பிப்-4 ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்தார். இதன் மூலம் சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலையாவார் என்று சொல்லப்படுகிறது.

“சசிகலா விடுதலை” அதிமுகவுக்கு பாதிப்பில்லை : அமைச்சர் உறுதி!

இந்நிலையில் அமைச்சர் பாண்டியராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிலையில், “சசிகலா வருகை அதிமுகவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதிமுக எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்கிறது; பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அரசின் தலையீடு இல்லை. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் எந்த தயவும் இன்றி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அஞ்சல் துறை தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்” என்றார்.