“இன்னும் சில நாட்களில் சசிகலாவின் அரசியல் பிரவேசம் தீவிரமாகும்”

 

“இன்னும் சில நாட்களில் சசிகலாவின் அரசியல் பிரவேசம்  தீவிரமாகும்”

எதிரிகளின் நெஞ்சம் பதறும் படி சசிகலா விஸ்வரூபம் எடுப்பார் என்று நமது எம்ஜிஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி சென்னை வந்தார்.சென்னைக்கு வரும் வழியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, இனி வரும் காலங்களில் நான் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளேன். தொண்டர்களின் அன்புக்கும் ,மக்களின் அன்புக்கும் நான் எப்போதுமே அடிமை. ஆனால் அடக்குமுறைக்கு என்றுமே நான் அடிபணிய மாட்டேன் என்று தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து சென்னை தி நகரில் உள்ள இளவரசி வீட்டில் ஓய்வெடுத்து வரும் சசிகலாவை டிடிவி தினகரன் உள்ளிட்டோர் சந்தித்து வருகின்றனர்.

“இன்னும் சில நாட்களில் சசிகலாவின் அரசியல் பிரவேசம்  தீவிரமாகும்”

இந்நிலையில் அமமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆரில் ‘அவதூறுகளுக்கு இனி துளியும் இடமில்லை’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், “துரோகிகள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும்; நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்; கழகம் வலிமையோடும் பொலிவோடும் இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டோர் சத்திய அரசியலில்தான் ஈடுபடுவார்கள். சந்தர்ப்பவாத அரசியலில் அல்ல; சூதும் சூழ்ச்சியும் கவ்விய அரசியலில் ஒருபோதும் ஈடுபடமாட்டார்கள். சுயநலத்திற்காக இயக்கம் சிதறுண்டு போவதை சின்னம்மா ஒருகாலும் ஏற்கமாட்டார்.

“இன்னும் சில நாட்களில் சசிகலாவின் அரசியல் பிரவேசம்  தீவிரமாகும்”

தொண்டர்களை காத்திட எந்த தொல்லையும் எதிர்த்து, எதிர் நீச்சல் போட துணிவோடு முடிவோடு தீவிர அரசியலில் ஈடுபட, திடமான உறுதியான முடிவை எடுத்துவிட்டார். சின்னம்மாவின் அரசியல் பிரவேசம் இன்னும் சில நாட்களில் அசுர வேகம் எடுக்கும். கழகம் புத்தெழுச்சி பெறும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டது.

“இன்னும் சில நாட்களில் சசிகலாவின் அரசியல் பிரவேசம்  தீவிரமாகும்”

தேர்தல் களம் புகுவோம்; எழுச்சியோடு களப்பணி ஆற்றுவோம் .புறப்படுங்கள் புறநானூற்று படைகளை தேர்தல் களம் நோக்கி… ஒன்று பட்டால் உண்டு வாழ்வு . எதிரிகளின் நெஞ்சம் பதறும் படி சின்னம்மா விஸ்வரூபம் எடுப்பார். துரோகிகளுக்கு மீண்டும் ஓர் எச்சரிக்கை. இனியும் துரோகிகளுக்கு மன்னிப்பு என்பது இல்லை” இவ்வாறு அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.