ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையாகிறார் சசிகலா

 

ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையாகிறார் சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா 2021 ஜனவரி 27ல் விடுதலையாகிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டார். அவரை டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவ்வப்போது சிறையில் சென்று சந்தித்து வருகின்றனர்.

ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையாகிறார் சசிகலா

இதையடுத்து சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டதாகச் சிறைத் துறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டியிருந்தார். இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது என்றும், சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீது குற்றம்சாட்டினார். சிறையிலும் சசிகலா நடத்திய சொகுசு வாழ்க்கை  பலரையும்  அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையாகிறார் சசிகலா

இந்நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா 2021 ஜனவரி 27ல் விடுதலையாகிறார். ஒருவேளை அவர் செலுத்த வேண்டிய ரூ.10 கோடி அபராதத்தை செலுத்த தவறினால் அவர் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனை பெற்று 2022 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று சிறை நிர்வாகம் கூறியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த நரசிம்மமூர்த்தி ஆர்டிஐ -இன் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு சிறைத்துறை நிர்வாகம் இவ்வாறு விளக்கமளித்துள்ளது. இன்னும் சில மாதங்களில் சட்ட மன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் சசிகலா விடுதலை செய்யப்படவுள்ளது அரசியல் களத்தை சூடுப்பிடிக்க வைத்துள்ளது.