“சசிகலாவே அதிமுகவை வழிநடத்த வேண்டும்” போராட்டத்தில் அதிமுகவினர்

 

“சசிகலாவே அதிமுகவை வழிநடத்த வேண்டும்” போராட்டத்தில் அதிமுகவினர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அதிமுகவை வழிநடத்த சசிகலா வர வேண்டும் என்பதை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.

“சசிகலாவே அதிமுகவை வழிநடத்த வேண்டும்” போராட்டத்தில் அதிமுகவினர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா அதிமுக பொதுச் செயலாளராகவும் டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர். எதிர்பாராத விதமாக சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல நேர்ந்ததால், கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடி, சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதுடன், ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வத்தையும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடியையும் நியமித்தது. இதனால் அதிமுகவிலிருந்து சசிகலா ஓரங்கட்டப்பட்டார். சிறையிலிருந்து வெளிவந்த சசிகலா அரசியலிலிருந்து விலகுவதாக வெளிப்படையாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் மறைமுகமாக ஏராளமான அதிமுகவினருடன் தொலைப்பேசியில் உரையாடிய சசிகலா, தான் மீண்டும் அதிமுகவை கைப்பற்றுவேன் என தெரிவித்துவருகிறார். அப்படி சசிகலாவுடன் தொலைபேசியில் பேசும் அதிமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையில் உளுந்தூர்பேட்டையில் அதிமுகவை வழிநடத்த வி கே சசிகலா வரவேண்டும் என்பதை வலியுறுத்தி ஏராளமானவர்கள் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மாவட்ட நிர்வாகி வேங்கையன் தலைமையில், திரண்ட அதிமுகவினர் சசிகலாவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்