சசிகலாவின் அறிக்கை தானா இது? சந்தேகத்தை கிளப்பும் கையெழுத்து!!

 

சசிகலாவின் அறிக்கை தானா இது? சந்தேகத்தை கிளப்பும் கையெழுத்து!!

அண்மையில் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, தமிழக அரசியலில் புயலை கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமைதியாக வீட்டுக்குள் முடங்கினார். நீண்ட நேர அமைதிக்கு பின் தற்போது அவர் விடுத்துள்ள அறிக்கையை வெளியிட்டார். அதில் தான் அரசியலை விட்டு விலகுகிறேன் என்றும், அதிமுக ஆட்சிக்கு இடையூறு செய்யமாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார். அறிக்கையில் முழுக்க முழுக்க அதிமுகவுக்கு ஆதரவாகவும், ஒரு தாய்‌ வயிற்றுப்‌ பிள்ளைகளான அம்மாவின்‌ உண்மைத்‌ தொண்டர்கள்‌ அனைவரும்‌ ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன்‌ வரும் தேர்தலில்‌ பணியாற்றிட வேண்டும்‌ என்றும் கூறியிருந்தார். திமுகவை வீழ்த்துவதே நோக்கம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

சசிகலாவின் அறிக்கை தானா இது? சந்தேகத்தை கிளப்பும் கையெழுத்து!!

இந்நிலையில் அது சசிகலா அறிக்கைதானா என்ற சந்தேகம் தற்போது கிளம்பியுள்ளது. ஏனெனில் முன்பு வந்த அறிக்கையில் எல்லாம் சசிகலா ஆங்கிலத்தில் கையெழுத்திட்டுள்ளார். ஆனால் இதில் வித்தியாசமாக தமிழில் கையெழுத்து போடப்பட்டுள்ளது. அதிமுகவினரின் அரசியல் விளையாட்டா? அல்லது எல்லாமே செட்டப்பா? என குழம்பவைக்கிறது. ஏனெனில் பெங்களூருவிலிருந்து வரும்போது கூட தேர்தலில் போட்டியிடுவேன் என அதிமுக கொடியோடு வீரநடை போட்டவர் தற்போது பின் வாங்குவாரா என்ற கேள்வி எழுகிறது.