செயற்கை ஆக்சிஜன் உதவியில்லாமல் சுவாசிக்க தொடங்கினார் சசிகலா

 

செயற்கை ஆக்சிஜன் உதவியில்லாமல் சுவாசிக்க தொடங்கினார் சசிகலா

கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சசிகலா செயற்கை ஆக்சிஜன் உதவியில்லாமல் சுவாசிக்க தொடங்கினார்.

சொத்துகுவிப்பு வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு சிறைக்கு சென்ற சசிகலாக்கு தற்போது சிறைத்தண்டனை முடியவுள்ளது. சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலையாவார் என்று சொல்லப்பட்ட நிலையில் திடீர் உடல் நலகுறைவால் அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு சசிகலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு கொரோனா தொற்று குறைந்துள்ளது. இதனால் அவர் தற்போது முறையாக உணவு உட்கொள்வதாகவும், எழுந்து நடப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதேபோல் அவரது விடுதலையும் குறிப்பிட்ட நாளில், அதாவது நாளை உறுதியாகியுள்ளது.

செயற்கை ஆக்சிஜன் உதவியில்லாமல் சுவாசிக்க தொடங்கினார் சசிகலா

இந்நிலையில் கடந்த 5 நாட்களாக சசிகலாவுக்கு செயற்கை ஆக்சிஜன் அளிக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது இயற்கையாக சுவாசிக்க தொடங்கினார். உடல் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, செயற்கை ஆக்சிஜன் கொடுப்பது நிறுத்தப்பட்டிருப்பதாக விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது. நாடித்துடிப்பு 64 இருப்பதாகவும், இரத்த அழுத்தம் 120/80 இருப்பதாகவும் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.