அக்டோபர் முதல் வாரத்தில் ‘சசிகலா’ விடுதலை? – அ.தி.மு.க. vs அ.ம.முக. பரபரப்பு

 

அக்டோபர் முதல் வாரத்தில் ‘சசிகலா’ விடுதலை? – அ.தி.மு.க. vs அ.ம.முக. பரபரப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். ஆனால், 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் மீதும் அவரது உறவினர்களான இளவரசி, சுதாகரன் உள்ளிட்டவர்கள் மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அக்டோபர் முதல் வாரத்தில் ‘சசிகலா’ விடுதலை? – அ.தி.மு.க. vs அ.ம.முக. பரபரப்பு


அதையடுத்து, 2017-பிப்ரவரி 15-ம் தேதி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர். நான்கு ஆண்டு தண்டனை சசிகலாவுக்கு விதிக்கப்பட்டாலும், ஏற்கெனவே அவர் சிறையிலிருந்த நாள்கள் மற்றும் நன்னடத்தை உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டி, தண்டனை காலத்துக்கு முன்பாகவே அதாவது 2020-ம் ஆண்டு இறுதியிலே விடுதலையாவார் என்று பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 14 அல்லது 16 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சசிகலா விடுதலையாகப் போகிறார் என்று செய்திகள் கசிந்தன.ஆனால் அவர் விடுதலை செய்யப்படவில்லை. இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் விடுதலை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளன.

அக்டோபர் முதல் வாரத்தில் ‘சசிகலா’ விடுதலை? – அ.தி.மு.க. vs அ.ம.முக. பரபரப்பு


தேர்தலுக்கு முன்பாகத் தமிழக அரசியலில் வலுவான ஓர் அணியை அமைக்க பா.ஜ.க விரும்புவதால் டெல்லி தலைமையும் சசிகலாவின் விடுதலைக்கு தலையாட்டி விட்டதாகச் சொல்லப்படுகிறது. தண்டனைக் காலத்துடன் அபராதத் தொகையான ரூ.10 கோடியை செலுத்த வேண்டியிருப்பதால், அதற்கு சசிகலா தரப்பு உறவினர்கள் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
சசிகலாவின் இந்த விடுதலைச் செய்தி அ.ம.மு.கவினரிடமும், அதிமுகவில் உள்ள சசிகலா ஆதரவாளர்களிடமும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அக்டோபர் முதல் வாரத்தில் ‘சசிகலா’ விடுதலை? – அ.தி.மு.க. vs அ.ம.முக. பரபரப்பு

சசிகலா சிறையில் இருந்து வெளியே வரும் பொழுது பிரமாண்ட வரவேற்பு கொடுக்க வேண்டும் என அவர்கள் முடிவு செய்துள்ளனராம்.
சசிகலா விடுதலையானால், எந்த கட்சியில் கவனம் செலுத்துவார் என்பதில் அ.தி.மு.கவும், அ.ம.மு.கவுக்கும் இப்போதே போட்டி நடப்பதால், அந்த கட்சிகளில் பரபரப்பு உருவாகியுள்ளது.

  • சந்திர போஸ்