வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை உறுதியானது!

 

வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை உறுதியானது!

2021 சட்டப்பேரவை தேர்தல் வரும், ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளை தமிழகத்தின் பிரதான கட்சிகள் தொடங்கி நடத்தி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட திமுகவின் தோழமை கட்சிகள் இடம்பெறும் என்பது கணிப்பு. அதேபோல் அதிமுக கூட்டணியில் பாஜக கட்சி இருப்பது உறுதியாகியுள்ளது. தேமுதிக, பாமக கட்சிகளின் நிலைப்பாடு விரைவில் வெளியாகும். இந்த சூழலில் சசிகலா விடுதலையும் பரபரப்பான ஒன்றாக பேசப்பட்டு வருகிறது. இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, இம்மாதம் 27 ஆம் தேதி விடுதலையாக வாய்ப்புள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை உறுதியானது!

இந்நிலையில் வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலையானது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ கடிதம் கிடைத்திருப்பதாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மணிமண்டபம் வரும் 27 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. அன்றைய தினமே சசிகலாவும் விடுதலை ஆகிறார்.