சசிகலா விடுதலைக்கு இதுவே பிரச்னை!

 

சசிகலா விடுதலைக்கு இதுவே பிரச்னை!

கடந்த 2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவின் தண்டனை காலம் விரைவில் முடிவடைய உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா வரும் ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் சசிகலாவின் வழக்கறிஞர் கர்நாடக சிறைத்துறையில் விதிகளின்படி நன்னடத்தை காரணமாக சசிகலாவுக்கு ஏற்கனவே 120 நாட்கள் சிறைபிடிப்பு சலுகை இருப்பதாகவும், அதனால் அவர் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்றும் கூறியிருந்தார். அதற்கு ஏற்றாற்போல் சசிகலாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 10 கோடி அபராததத்தையும் அவரது வழக்கறிஞர் மூலம் அண்மையில் சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினார் சசிகலா. ஒருவேளை சசிகலா இந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறி இருந்தால் அவருக்கு மேலும் ஒரு ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் சசிகலாவின் அபராத தொகையும் செலுத்தபட்டு விட்டதால் அவர் ஜெயலலிதாவின் நினைவுநாளான இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது.

சசிகலா விடுதலைக்கு இதுவே பிரச்னை!

இந்நிலையில் சசிகலா தண்டனை காலத்தில் கன்னடம் கற்றுக்கொண்டது, கம்யூட்டர் பயிற்சி படித்தது, தோட்ட வேலை செய்தது உள்ளிட்டவை சிறையின் நன்னடத்தையின் கீழ் வந்தாலும் விடுதலை சலுகைக்கு இது பொருந்தாது என்கிறது சிறைத்துறை நிர்வாகம். காரணம் நன்னடத்தை விதிகளின் படி முன்கூட்டியே விடுதலையாகும் சலுகை, கிரிமினல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறையில் இருந்து 60 வயது கடந்த பெண் கைதிக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும், சசிகலாவுக்கு 69 வயது ஆனாலும் 12 ஆண்டுகள் சிறையில் இருக்கவில்லை என்பதால் இந்த சலுகை பொருந்தாது என்றும் கூறப்படுகிறாது.