சசிகலா விடுதலை தேதியைக் கூற முடியாது! – கர்நாடக சிறைத்துறை பதில்

 

சசிகலா விடுதலை தேதியைக் கூற முடியாது! – கர்நாடக சிறைத்துறை பதில்

சசிகலா விடுதலையாகும் தேதி குறித்து உறுதியாக கூற முடியாது என்று கர்நாடக சிறைத்துறை தெரிவித்துள்ளது.

சசிகலா எப்போது விடுதலையாவார் என்பதுதான் தற்போது தமிழக அரசியலில் முக்கியமான விவாதங்களுள் ஒன்றாக உள்ளது. இப்போது வந்துவிடுவார், அப்போத வந்துவிடுவார் என்று பல தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. சசிகலா வெளியே வர உள்ளதால்தான் போயஸ் கார்டன் இல்லத்தை அரசு எடுக்க அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது என்று பலர் கருத்து தெரிவித்தனர். செப்டம்பர் மாதம் விடுதலையாவர் என்று தமிழக சிறைத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் தேதியைக் கணித்திருந்தார்.

சசிகலா விடுதலை தேதியைக் கூற முடியாது! – கர்நாடக சிறைத்துறை பதில்எதற்கு இவ்வளவு குழப்பம், இது குறித்து கர்நாடக சிறைத்துறையிடமே ஆர்.டி.ஐ மூலம் கேட்டுவிடலாமே என்று நரசிம்ம மூர்த்தி என்பவர் விண்ணப்பம் செய்திருந்தார். இதற்கு கர்நாடக சிறைத்துறை அளித்த பதில் குழப்பத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

சசிகலா விடுதலை தேதியைக் கூற முடியாது! – கர்நாடக சிறைத்துறை பதில்கர்நாடக சிறைத்துறை அளித்த பதிலில், “குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளியின் விடுதலை தேதியை முடிவு செய்வதில் பல்வேறு கணக்கீடுகள் உள்ளன. உதாரணத்துக்கு, குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்துவது கூட விடுதலையாகும் தேதியில் மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே, துல்லியமாக விடுதலையாகும் தேதியை தற்போது வழங்க முடியாத நிலையில் உள்ளோம்” என்று கூறியுள்ளனர்.
இந்த பதிலில் அபராதம் செலுத்துவது பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தினாரா இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது