நீதித்துறைக்கு மிக்க நன்றி- சசிகலா புஷ்பா உருக்கம்

 

நீதித்துறைக்கு மிக்க நன்றி- சசிகலா புஷ்பா உருக்கம்

கூகுள், யூ.டியூப் ஆகிய சமூக வலைதளங்களில் தன்னை அவதூறாகவும், தவறாகவும் சித்தரித்து போலியாக உருவாக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை நீக்குமாறு அந்த இணையதளங்களுக்கு உத்தரவிடக்கோரி கடந்த 2016ஆம் ஆண்டு அதிமுக முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அவதூறு புகைப்படங்களை நீக்க வேண்டும் என பேஸ்புக், கூகுள், யூடியூப் ஆகிய நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு, அதுதொடர்பான அறிக்கையை வரும் 8ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

இந்த நீதிக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள சசிகலா புஷ்பா, “நீதித்துறைக்கு மிக்க நன்றி. பெண்களின் பெயரை சேதப்படுத்துவது உண்மையில் என் வாழ்க்கையில் நடந்தது. அனைத்து புகைப்படங்களும் போலி மற்றும் மார்பிங் செய்யப்பட்டது என்பது 4 ஆண்டுகளுக்குப் பிறகு, தெரியவந்துள்ளது. எனக்கு நீதி கிடைத்துவிட்டது” என பதிவிட்டுள்ளார்.