‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ : தேனியில் அனல் பறக்கும் அதிமுக- அமமுக போஸ்டர்கள்!

 

‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ : தேனியில் அனல் பறக்கும் அதிமுக- அமமுக போஸ்டர்கள்!

அதிமுக மற்றும் அமமுக ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என தேனியின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

2017ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, ரிலீஸாகி சென்னை வந்திருக்கிறார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவுடனே அதிமுகவை மீட்க கட்சிக் கொடியை கையிலெடுத்துக் கொண்டார் சசிகலா. கொடியை பயன்படுத்தாமல் தடுக்க அதிமுக தலைமை மேற்கொண்ட எந்த நடவடிக்கையும் சசிகலாவிடம் பலிக்கவில்லை. தமிழக எல்லை வரையில் தனது காரில் அதிமுக கொடியுடன் வந்த சசிகலா, யாரும் எதிர்பாராத விதமாக கொடி பொறுத்தப்பட்ட அதிமுக தொண்டரின் காரில் சென்னை வந்தடைந்தார்.

‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ : தேனியில் அனல் பறக்கும் அதிமுக- அமமுக போஸ்டர்கள்!

அதிமுகவால், சசிகலாவுக்கு காரை கொடுத்தவரை கட்சியில் இருந்து நீக்க முடிந்ததே தவிர வேறு ஏதும் செய்ய முடியவில்லை. சசிகலா இதைத் தான் செய்வார் என அதிமுக ஒன்று யூகித்துக் கொண்டிருக்கையில், நினைத்ததற்கு மாறாக மாற்றுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார் சசிகலா. அமமுக – அதிமுக இணையுமா? சசிகலா மீண்டும் அதிமுகவை கைப்பற்றுவாரா? தேர்தலை எதிர்கொள்ளப் போவது எப்படி? இப்படி பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

இந்த நிலையில், ஓபிஎஸ் ஈபிஎஸ் படங்களுடன் ‘இணைந்தால் பங்கு இல்லையேல் சங்கு’ என தேனி சின்னமனூர் அருகே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதே போல சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்களுடன் ஒன்றுபட்டால் வாழ்வு இல்லையேல் தாழ்வு என்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.