“ஓபிஎஸ் தொகுதியில் சின்னம்மா” – கலக்கத்தில் ஆதரவாளர்கள்!

“ஓபிஎஸ் தொகுதியில் சின்னம்மா” – கலக்கத்தில் ஆதரவாளர்கள்!

சசிகலாவுக்கு ஆதரவாக தேனியில் அதிமுகவினர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

“ஓபிஎஸ் தொகுதியில் சின்னம்மா” – கலக்கத்தில் ஆதரவாளர்கள்!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலையாகினார். இதைத்தொடர்ந்து கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட அவர் தற்போது பெங்களூரில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுத்து வருகிறார். ஓய்வுக்குப் பிறகு வரும் 5-ஆம் தேதி அவர் தமிழகம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“ஓபிஎஸ் தொகுதியில் சின்னம்மா” – கலக்கத்தில் ஆதரவாளர்கள்!

இந்நிலையில் சசிகலாவின் தமிழக வருகையை அதிருப்தி அதிமுகவினர் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த வகையில் துணை முதல்வர் ஓபிஎஸின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதாவது பெரியகுளம் மேற்கு ஒன்றிய அம்மா பேரவை அவைத்தலைவர் வைகை சாந்தகுமார் ஒட்டியுள்ள போஸ்டரில் , ‘எங்கள் குலசாமி தமிழகத்தின் தலைஎழுத்தை மாற்ற தீயாக வரும் தியாகத் தலைவி சின்னம்மா வருக வருக’ என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

“ஓபிஎஸ் தொகுதியில் சின்னம்மா” – கலக்கத்தில் ஆதரவாளர்கள்!

ஏற்கனவே சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டிய திருச்சி, தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வரும் நிலையில் ஓபிஎஸ் சொந்த ஊரான பெரியகுளத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.