ஜூன், ஜூலையில் வெளியே வருகிறார் சசிகலா! -வழக்கறிஞர் தகவல்

 

ஜூன், ஜூலையில் வெளியே வருகிறார் சசிகலா! -வழக்கறிஞர் தகவல்

வருகிற ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை மாதத்தில் சசிகலா தண்டனைக்காலம் முடிந்து சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளதாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. இதனால் ஜெயலலிதா உள்ளிட்டோர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பிறகு உச்ச நீதிமன்றம் சென்று ஜாமீன் பெற்ற வெளியே வந்தனர். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் கணக்கு குளறுபடி காரணமாக நான்கு பேரும் விடுதலை செய்யப்பட்டனர். அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. இதற்குள்ளாக ஜெயலலிதா காலமாகிவிட்டதால், சசிகலா உள்ளிட்ட நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜூன், ஜூலையில் வெளியே வருகிறார் சசிகலா! -வழக்கறிஞர் தகவல்
2017ம் ஆண்டு சசிலா சிறைக்கு சென்றார். மொத்தம் நான்கு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே 1996ல் சிறையில் இருந்த நாட்கள், சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு சிறையில் இருந்த நாட்கள், விடுமுறை நாட்கள் உள்ளிட்டவற்றைக் கழித்தால் 2020 செப்டம்பர் மாதம் அவர் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், முன்கூட்டியே விடுதலை ஆகவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சசிகலா வசித்து வரும் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வேதா நிலையம் இல்லத்தை தமிழக அரசு கையகப்படுத்தி அவசர சட்டத்தைப் பிறப்பித்துள்ளது. சசிகலா விரைவில் வெளிவர உள்ள நிலையில்தான் தமிழக அரசு வேக வேகமாக இந்த சட்டத்தைப் பிறப்பித்துள்ளது என்று பேச்சு எழுந்துள்ளது.
இது குறித்து சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறுகையில், “சசிகலாவை வெளியே கொண்டுவருவதற்கான சட்ட ரீதியான முயற்சியில் இருக்கிறோம். விரைவில் சொல்கிறோம். நான் சசிகலாவை மார்ச் மாதம் முதல் வாரம் சிறைக்கு சென்று சந்தித்தேன். அதன்பிறகு கொரோனா ஊரடங்கு காரணமாக அவரை சந்திக்க முடியவில்லை. இந்த நிலையில் போயஸ்கார்டன் அவசர சட்டம் குறித்து சசிகலாவுக்கு தெரியப்படுத்துவது அவரது வழக்கறிஞராக எனது கடமையாக உள்ளது.

ஜூன், ஜூலையில் வெளியே வருகிறார் சசிகலா! -வழக்கறிஞர் தகவல்
இந்த வழக்கில் சசிகலா 1996ம் ஆண்டு சிறையில் இருந்த நாட்கள், 2014ம் ஆண்டு சிறையில் இருந்த நாட்களைக் கணக்கில் கொண்டும், இருமுறை பரோலில் வந்த நாட்களையும் கணக்கில் கொண்டு முதல் கட்டமாக சிறைவாசிக்கு சிறைத்துறை வழங்கும் சலுகைகளைக் கொண்டு பார்த்தால் வருகிற செப்டம்பர் மாதம் அவர் விடுதலையாக வேண்டும்.
இரண்டாவது கட்டமாக நாங்கள் செய்யும் சட்ட பூர்வமான முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் அவர் இந்த ஜூன், ஜூலையில் விடுதலையாவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது” என்றார்.