சசிகலாவின் தற்போதைய நிலை என்ன? – மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட தகவல்!

 

சசிகலாவின் தற்போதைய நிலை என்ன? – மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட தகவல்!

விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலா சுய நினைவுடன் இருப்பதாகவும், அவரின் இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் அவர் நாளை விடுதலையாவது உறுதியாகியிருக்கிறது.

2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சசிகலா பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கான தண்டனைக் காலம் முடிவடையவிருப்பதால், நாளை (ஜன.27) அவர் விடுதலையாவார் என சிறைத் துறை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இச்சூழலில், திடீரென்று அவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது.

உடனடியாக அவர் பவுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு, பாசிட்டிவ் என வந்தது. அதன்பின் அவர் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நல பிரச்சினையால் சசிகலாவின் விடுதலை தள்ளிப்போகலாம் என்ற தகவல் வெளியானது.

சசிகலாவின் தற்போதைய நிலை என்ன? – மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட தகவல்!

இருப்பினும், சசிகலா எந்த நிலையில் இருந்தாலும் சட்டப்படி அவரை ஜன.27இல் விடுதலை செய்ய வேண்டும் என அவரின் வழக்கறிஞர்கள் கூறியிருந்தனர். இதையடுத்து கொரோனா அறிகுறிகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

இதனிடையே சசிகலாவை நாளை விடுதலை செய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன. நாளை காலை 11 மணிக்கு மருத்துவமனை வரும் சிறைத் துறை அதிகாரிகள் சசிகலாவிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டு அவரை விடுதலை செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.

சசிகலாவின் தற்போதைய நிலை என்ன? – மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட தகவல்!

தற்போது மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில், சசிகலா சுய நினைவுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அவரின் உடல்நிலை சீராகிவருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. சசிகலாவின் இதயத் துடிப்பும் ரத்த அழுத்தமும் சீராக இருப்பதாகவும் கூறியுள்ளது. இதன்மூலம் சட்டப்படி நாளை காலை சசிகலா விடுதலையாவது உறுதியாகியுள்ளது.