சசிகலா வருகை – பாஜகவின் அடுத்த ப்ளான்… பரபரப்பாகும் களம்

 

சசிகலா வருகை – பாஜகவின் அடுத்த ப்ளான்… பரபரப்பாகும் களம்

பாரதிய ஜனதா கட்சியின் திட்டங்கள் நாள்தோறும் மாறிக்கொண்டே இருக்கின்றன. பாஜகவின் இலக்கு என்பது இந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றி விடவேண்டும் என்பது அல்ல. ஆனால், அடுத்த சட்டசபை தேர்தலில் திமுக vs பாஜக என்றுதான் இருக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறது.

2026 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைக்க இப்போதிருந்தே லகான் தங்கள் கையில் இருக்க வேண்டும் எனத் திட்டமிடுகிறது. எனவே, அதிமுகவைப் பலவீனப்படுத்தும் முடிந்தால் திமுகவை ஆட்சிக்கே வர விடாமல் செய்யும் திட்டங்களை வகுக்கிறது.

சசிகலா வருகை – பாஜகவின் அடுத்த ப்ளான்… பரபரப்பாகும் களம்

ரஜினியை நம்பி இத்தனை நாட்கள் காத்திருந்தது பாஜக. அது நடக்காமல் போகவே அடுத்த ப்ளானில் இறங்கி விட்டது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிச்சாமியை ஏற்காமல் கால தாமதம் செய்து வருகிறது.

இம்மாத இறுதியில் சசிகலா விடுதலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் மீது வழக்குகள் ஏதும் பதியப்படாமல் அல்லது ஏற்கெனவே இருக்கும் வழக்குகளை கிளறாமல் இருக்க பாஜக தரப்பு ஏதேனும் ஒரு ஒப்பந்தம் போடப்படும் என்று பேசப்படுகிறது. அதன்படி, தினகரன் – அதிமுக இணைப்பு மூலம் தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சர் வேட்பாளர் எனும் கருத்தை வலியுறுத்தலாம் என்றும் திட்டமிடுவதாகச் செய்திகள் அடிபடுகின்றன.

சசிகலா வருகை – பாஜகவின் அடுத்த ப்ளான்… பரபரப்பாகும் களம்

ஜெயலலிதா தலைமையில் கட்சி இருந்த காலத்திலும் பெரும்பான்மையான முடிவுகள் சசிகலாவின் பரிந்துரைகளே ஏற்கப்பட்டன. ஓ.பி.எஸ் முதல்வராக ஆனதும்கூட. அதனால் சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்ததும் பொறுப்பில் இருப்பவர்கள் மற்றும் எம்.எல்.ஏ, எம்.பி.கள் தவிர மற்றவர்களின் குறிப்பிட்ட சதவிகித்ததினர் சசிகலா நோக்கிச் செல்லக்கூடும். அதை வைத்தே தினகரன் – சசிகலா – அதிமுக இணைப்பைச் சாத்தியப்படுத்தும் பாஜக.

ஒன்றுப்பட்ட அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க சசிகலா விரும்புவாரா என்பது சந்தேகத்துக்கு உரியது. அதனால்தான் நிர்மலா சீதாராமன் முதல்வர் வேட்பாளரா எனும் செய்தியை வெளியே உலாவ விட்டுள்ளது பாஜக. அதனால், அதை மையப்படுத்தி செயல்பட தொடங்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இவையெல்லாம் திமுகவுக்கு சாதகமாக மாறும் என்றும் ஒரு தரப்பு சொல்லிக்கொண்டிருப்பதால் அதையும் கவனத்தோடு பரிசீலனை செய்துவருகிறதாம்.