சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்! மருத்துவமனை அறிக்கை

 

சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்! மருத்துவமனை அறிக்கை

சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி, பெங்களூருவிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தண்டனை காலம் முடிவடைந்ததால் அவர், சிறையிலிருந்து ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலை ஆவார் என்ற செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருந்தது, அந்த நேரத்தில் திடீரென்று சசிகலாவிற்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்! மருத்துவமனை அறிக்கை

இந்நிலையில் இன்று மாலை சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது. முன்புக்கு தற்போது சிறிது முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. சக்கரை, ரத்த அழுத்தம், தைராய்டு உள்ளிட்டவை சீராக உள்ளது. கொரோனா நோய் வழிகாட்டுதல்படி அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுகிறது” எனக் கூறினார்.

இருப்பினும் சசிகலா திட்டமிட்டப்படி 27 ஆம் தேதி சென்னை வர வாய்ப்பில்லை. கொரோனா நோயாளிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதால் அவர் பெங்களூருவைவிட்டு வரமுடியாது.