சசிகலாவின் அபராதத் தொகை ரூ 10 கோடி ரெடி!

 

சசிகலாவின் அபராதத் தொகை ரூ 10 கோடி ரெடி!


சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சசிகலாவின் தண்டனை காலம் வரும் 2021 பிப்ரவரியில் முடிகிறது.
இந்நிலையில், சமீபத்தில் சசிகலா அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனுக்கு அனுப்பிய கடிதத்தில், தனது தண்டனை காலம் குறைக்கப்பட வாய்ப்புள்ளது என்றும், எனவே அபராதத் தொகை ரூ.10 கோடியை பெங்களூரு விசாரணை நீதிமன்றத்தில் செலுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளுங்கள் என்றும், இதுகுறித்து டிடிவி. தினகரனுடன் ஆலோசிக்குமாறும் தெரிவித்திருந்தார்.

சசிகலாவின் அபராதத் தொகை ரூ 10 கோடி ரெடி!


இந்நிலையில், வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறும்போது, ‘‘இன்னும் ஒருவாரத்தில் சசிகலா வெளிவருவதற்கான வாய்ப்பு உள்ளது. சிறை கைதிகள் நன்னடத்தையின்படி, சசிகலா 43 மாத காலம் சிறைவாசத்தை முடித்துள்ளார், 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் 129 நாட்கள் அவருக்கு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. எனவே அவர் ஒருவாரத்தில் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம், எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரும்” எனக் கூறினார்.

சசிகலாவின் அபராதத் தொகை ரூ 10 கோடி ரெடி!


இதற்கிடையே சசிகலாவின் அபராதத் தொகையான ரூ 10 கோடியை தயார் செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் ஆலோசனையின்படி பல பேரிடம் இருந்து பணம் பெற்றுள்ளனராம். இந்த 10 கோடியை பலரிடம் உதவியாக வாங்கியதாவும், ஒரு அறக்கட்டளையின் சார்பில் செலுத்தப் போவதாகவும் சொல்கிறார்கள். மேலும் இதற்கான வருமான வழி முறைகள் குறித்த, மற்றும் வரி சம்பந்தமான அறிக்கை ஒன்றையும் தயார் செய்து வைத்திருக்கிறார்களாம் எனவே ரூ 10 கோடியைக் கட்டுவதில் பிரச்சனை எதுவும் இல்லை. பணமும் ரெடி.. சின்னம்மாவின் விடுதலையும் விரைவில் ரெடி என்கிறார்கள் நெருக்கமான வட்டாரத்தினர்.