எடப்பாடியிடம் சரண்டர் ஆன சசிகலா … கூட்டணிக்காக போராடும் டிடிவி

 

எடப்பாடியிடம் சரண்டர் ஆன சசிகலா … கூட்டணிக்காக போராடும் டிடிவி

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவுக்கு மிகப்பெரிய வரவேற்பு காத்திருந்தது. வழிநெடுகிலும் அவருக்கு அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் அதிமுகவில் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள், மூத்த அமைச்சர்கள் தங்கள் பக்கம் சாய்ந்து விடுவார்கள் நின்று சசிகலாவும் ,டிடிவி தினகரன் கணக்குப் போட்டு இருந்தனர், ஆனால் நடந்ததோ வேறு . சசிகலா சென்னைக்கு வந்து கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேலாகியும் அவரை எந்த அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் சந்திக்கவில்லை.இதனால் சசிகலா அப்செட் ஆகிவிட்டாராம்.

எடப்பாடியிடம் சரண்டர் ஆன சசிகலா … கூட்டணிக்காக போராடும் டிடிவி

இருப்பினும் சசிகலா விடுதலைக்கு முன்பே டெல்லிக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டு வந்த டிடிவி தினகரன் அதிமுகவுடன் அமமுகவை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அத்துடன் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சசிகலாவின் ஆதரவாளர்களுக்கு 40 சீட் போது ஒதுக்கவேண்டும் என்றும் சசிகலாவுக்கு பொதுச் செயலாளர் பதவியை கொடுக்க வேண்டும் என சில கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இதற்கு பாஜக தரப்பில் சில முக்கிய புள்ளிகள் ஓகே சொல்லிவிட்டதாம்.இதை எப்படியாவது பயன்படுத்தி அதிமுகவை கைப்பற்ற திட்டமிட்டனர் சசிகலாவும் டிடிவி தரப்பும். ஆனால் இதற்கான பேச்சுவார்த்தையில் எடப்பாடி பழனிசாமி பிடிகொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆதரவாளர்களுக்கு 40 சீட்டு, பொதுச் செயலாளர் பதவியை எதற்கும் எடப்பாடி பழனிசாமி தலையசைக்கவில்லையாம்.

எடப்பாடியிடம் சரண்டர் ஆன சசிகலா … கூட்டணிக்காக போராடும் டிடிவி

அதிமுக சசிகலாவின் கைவசம் சென்றால், அது சாதி சங்கம் ஆகிவிடும் என்று அதிமுக தரப்பினர் அச்சப்படுகின்றனர். காரணம் அமமுகவுக்கு தற்போது ஒரு குறிப்பிட்ட சாதிப் பிரிவினர் மட்டுமே வாக்களித்து வருகின்றனர். இதனால் அதிமுகவுக்கும் நிலை ஏற்படும் என்பது தலைமை கழகத்தில் பயமாக உள்ளது. இருப்பினும் அமித்ஷாவிடம் சில தொழிலதிபர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் சசிகலா. 40 சீட்டு, பொதுச்செயலாளர் பதவி என கோரிக்கை வைத்து வந்த சசிகலா கூட்டணி வைத்தாலே போதுமானது என்ற அளவிற்கு இறங்கி, எடப்பாடியிடம் சரண்டர் ஆகி விட்டாராம். ஆனால் அதற்கும் எடப்பாடி தரப்பினர் எந்த சாதகமான பதிலையும் தெரிவிக்கவில்லையாம்.

எடப்பாடியிடம் சரண்டர் ஆன சசிகலா … கூட்டணிக்காக போராடும் டிடிவி

வருகிற சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் நிச்சயம் டெபாசிட் வாங்க மாட்டோம் என்ற நிலையை உணர்ந்த சசிகலாவும் தினகரன் தரப்பும், அதிமுகவுடன் எப்படியேனும் கூட்டணி வைத்து விட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர். ஆனால் சசிகலா மற்றும் தினகரனை எந்த சூழலிலும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என திட்டவட்டமாக முடிவெடுத்து உள்ள அதிமுக தலைமை கழகம் மௌனம் காத்து வருகிறது. அத்துடன் நேரடியாக மோடி மூலமாகவே சசிகலா பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம் என்று முடிவெடுத்துள்ள எடப்பாடி அதற்கான பணிகளை செய்து வருகிறாராம்.