“சசிகலா முடிவு ஜெயலலிதா ஆன்மாவை சாந்தியடைய வைக்கும்” : கே.பி.முனுசாமி

 

“சசிகலா முடிவு ஜெயலலிதா ஆன்மாவை சாந்தியடைய வைக்கும்” : கே.பி.முனுசாமி

ஜெயலலிதாவின் விசுவாசியாக இருப்பதாக சசிகலா கூறியது மகிழ்ச்சி என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

“சசிகலா முடிவு ஜெயலலிதா ஆன்மாவை சாந்தியடைய வைக்கும்” : கே.பி.முனுசாமி

தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்துவார் என்று நினைத்த சசிகலா அரசியலை விட்டு விலகுவதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “நான் அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பேன். நான் என்றும், பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் நன்றியுடன் இருப்பேன். அக்கா உயிருடன் இருந்தபோது அவரின் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேன். அம்மா ஆட்சி தொடர உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றவேண்டும். நம் பொது எதிரி திமுகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து அம்மாவின் ஆட்சி அமைய பாடுபட வேண்டும். என்மீது அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்களுக்கும் என உளமார்ந்த நன்றி” என்று குறிப்பிட்டிருந்தார்.

“சசிகலா முடிவு ஜெயலலிதா ஆன்மாவை சாந்தியடைய வைக்கும்” : கே.பி.முனுசாமி

இந்நிலையில் இது குறித்து அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி அளித்துள்ள பேட்டியில், ” சசிகலாவின் முடிவு ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தி அடைய வழி வகுக்கும். ஜெயலலிதா ஆட்சி வரக்கூடாது என நினைப்பவர் டிடிவி தினகரன். ஜெயலலிதாவின் விசுவாசியாக இருப்பதாக சசிகலா கூறியதற்கு நான் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுகவில் சசிகலா இணைக்கப்படுவாரா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்” என்றார்