சிறையில் கண்ணீர் விட்டு அழுத சசிகலா!

 

சிறையில் கண்ணீர் விட்டு அழுத சசிகலா!

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த நான்கு வருடங்களாக இருக்கிறார் சசிகலா. அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி விடுதலை ஆவதாக தகவல் வெளிவந்தது. பின்னர் ஆகஸ்ட் 28ம் தேதி விடுதலை ஆவதாக தகவல் வந்தது. உண்மையில் , சசிகலாவுக்கான 10 கோடி ரூபாய் அபராத தொகையினை இன்னமும் கட்டாமல் இருப்பதாகவும், அதைக் கட்டி முடித்தவுடன் தான் சசிகலாவின் விடுதலை குறித்து சிறைத்துறை அறிவிக்கும் என்றும் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சிறையில் கண்ணீர் விட்டு அழுத சசிகலா!

இந்த சூழலில் சிறையில் இருக்கும் சசிகலா, கொரோனாவால் உயிரிழந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் மரணத்தை நினைத்து கதறி அழுததாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா காலத்திலும் அமமுக துடிப்பாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்த தினகரன் அவ்வப்போது ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெற்றிவேலையும் தினகரன் கலந்து கொள்ள வைத்தார். இதுவே வெற்றிவேலுக்கு தொற்று ஏற்பட காரணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

வெற்றிவேல் மரணம் குறித்து தினகரனிடம் கேட்டறிந்த சசிகலா, வெற்றி மாதிரி நமக்கு உழைக்க இன்னொரு ஆளு கிடைக்குமா? அக்கா, ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த வீடியோவை வெளியிட்டு அதனால் வந்த எதிர்ப்புகளையெல்லாம் வீரமாக சமாளிச்சி விசுவாசமாக இருந்தவர் வெற்றிவேல் தான் என சொல்லி அழுதுள்ளார். மேலும் நான் உன்னை சும்மா தான இருக்க சொன்னேன் எதுக்கு ஆலோசனை கூட்டமெல்லாம் நடத்தினாய் என அதட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, வெற்றிவேல் வசம் கொடுக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா அப்பலோவில் இருந்தபோது எடுத்த வீடியோ ஆதாரங்களைக் கண்டெடுத்து கைப்பற்றும் படி தினகரனுக்கு சசிகலா உத்தரவிட்டார்.