சசிகலாவுக்கு அதிமுகவினர் செக்! கேபிள் டிவி ஒளிபரப்பை நிறுத்தியதால் சலசலப்பு

 

சசிகலாவுக்கு அதிமுகவினர் செக்! கேபிள் டிவி ஒளிபரப்பை நிறுத்தியதால் சலசலப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுவந்த சசிகலா நான்காண்டு சிறைவாசத்திற்குப் பின் இன்று மீண்டும் தமிழகம் திரும்பினார். அவர் வருவதற்கு முன்பே முன்னெச்சரிக்கையாக பலத்த காவல்துறையினர் பாதுகாப்பு போட்டது அதிமுக. பேனர்கள் அகற்றப்பட்டன. போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என சட்டத்திட்டங்கள் எல்லாம் போட்டது அதிமுக அரசு. இத்தனை தடைகளை மீறி தமிழகத்துக்கு வந்தார் சசிகலா. அவரின் வருகை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மத்தியிலும், தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

சசிகலாவுக்கு அதிமுகவினர் செக்! கேபிள் டிவி ஒளிபரப்பை நிறுத்தியதால் சலசலப்பு

இதனால் அனைத்து செய்தி சேனல்களும் சசிகலாவின் வருகையை நாள் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டனர். சசிகலா பெங்களூருவிலிருந்து தமிழகம் வரும் வரை அவரின் சிறு சிறு நகர்வுகளை கூட விடாமல் படம் பிடித்துவந்தனர். இதனை கண்ட அதிமுகவினர்,தமிழகஅரசு அரசு மற்றும் டிசிசிஎல் கேபிள் நெட்ஒர்க்கில் சசிகலா வருகை குறித்த செய்தி சேனல்களின் ஒளிபரப்பை நிறுத்தின. இதனால் சேனல்களில் காட்சிகள் தெளிவாக தெரியவில்லை என மக்கள் புலம்ப தொடங்கியுள்ளன. அதே டிவியின் யூடியூப் பக்கங்களில் மட்டும் காட்சிகள் தெளிவாக தெரிவதாகவும், தொலைக்காட்சியில் மட்டும் ஒளிபரப்பு தடை படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எப்படியெல்லாம் சசிகலாவுக்கு முட்டுக்கட்டை போடலாமோ அப்படியெல்லாம் முட்டுக்கட்டை போட்டுவருகிறது அதிமுக அரசு.