பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வரும் சசிகலா – திட்டங்கள் என்ன?

பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வரும் சசிகலா – திட்டங்கள் என்ன?

நாளை மறுநாள் விடுதலையாகும் சசிகலா பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வரும் சசிகலா – திட்டங்கள் என்ன?

கொரோனா தொற்று காரணமாக சசிகலா பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட வரும் நாளை மறுநாள் விடுதலையாகும் நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதனால் உரிய நேரத்தில் சசிகலா விடுதலையாவாரா? என்ற கேள்வி எழுந்தது.

பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வரும் சசிகலா – திட்டங்கள் என்ன?

இந்நிலையில் சசிகலா 27 ஆம் தேதி விடுதலையாவதையொட்டி அதற்கான சிறைத்துறை நடைமுறைகள் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக சசிகலா சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா அங்கிருந்தபடியே விடுதலையாவார் என்று அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வரும் சசிகலா – திட்டங்கள் என்ன?

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலா பிப்ரவரி முதல் வாரம் தமிழகம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணா நினைவு நாளான 3 ஆம் தேதி பெங்களூருவில் இருந்து சசிகலா சென்னை திரும்ப வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளதால் சென்னை திரும்பும் சசிகலா, தமிழகம் வந்ததும் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம், தஞ்சையில் கணவர் நடராஜன் நினைவிடம் செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.