வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை.. ஆணையத்தை நாடும் சசிகலா!

 

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை.. ஆணையத்தை நாடும் சசிகலா!

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, தமிழகத்துக்கு மாஸ் என்ட்ரி கொடுத்தார். அன்றைய தினம் தமிழகமே திக்கு முக்காடிப்போனது. சென்னை வந்த சசிகலா அதிமுகவை ஆட்டம் காண வைப்பார் என அரசியல் நோக்கர்கள் கூறி வந்த நிலையில், அவர் திடீரென அரசியலில் இருந்து விளக்கினார். பல தரப்பில் இருந்து நெருக்கடி தரப்பட்டதாலும் தன்னை சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை அறிந்ததாலும் அவர் அரசியலில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. அதற்கான உண்மைக் காரணம் இதுவரை தெரியவரவில்லை.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை.. ஆணையத்தை நாடும் சசிகலா!

அரசியலில் பயணத்தில் இருந்து விடைபெற்ற சசிகலா, எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காமல் ஆன்மீக பயணத்தை மேற்கொள்ள ஆரம்பித்தார். செல்லும் கோவில்களிலெல்லாம் அவர் பரிகார பூஜை செய்வதாக தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில், நாளை நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் சசிகலா பெயர் இடம்பெறாதது சர்ச்சைக்கு வழிவகுத்தது. இளவரசியின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. இது திட்டமிடப்பட்ட சதி தான் என அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை.. ஆணையத்தை நாடும் சசிகலா!

இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் சசிகலா பெயர் இடம்பெறாதது குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையீடு செய்திருப்பதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். போயஸ் கார்டன் இல்லத்தின் முகவரி தான் சசிகலாவின் வாக்காளர் அட்டையில் இருக்கிறது என்றும் பெயர் எப்படி நீக்கம் செய்யப்பட்டது என்ற விவரங்களை சேகரித்த பின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை என்றும் அவர் கூறியுள்ளார்.