”குட்டீஸ்களுக்கு ரைம்ஸ், கதை சொல்லும் புளூடூத் ஸ்பீக்கர்” – சரிகமா நிறுவனம் அறிமுகம்

”குட்டீஸ்களுக்கு ரைம்ஸ், கதை சொல்லும் புளூடூத் ஸ்பீக்கர்” – சரிகமா நிறுவனம் அறிமுகம்

வீட்டுக்குழந்தைகளுக்கு ரைம்ஸ் மற்றும் கதை சொல்வதற்கு ஏதாவது சாதனம் இருந்தா தேவலன்னு தேடிகிட்டு இருந்தீங்கண்ணா..உங்களுக்கான செய்திதான் இது ! ரைம்ஸ், கதைகள் இன்பில்ட் ஆக கொண்ட ”கேரவான் மினி கிட்ஸ்” எனப்படும் புளூடூத் ஸ்பீக்கரை சரிகமா நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

”குட்டீஸ்களுக்கு ரைம்ஸ், கதை சொல்லும் புளூடூத் ஸ்பீக்கர்” – சரிகமா நிறுவனம் அறிமுகம்

இந்த கையடக்க ஸ்பீக்கரில் 300க்கும் மேற்பட்ட கதைகள், 80க்கும் மேற்பட்ட ரைம்ஸ் பாடல்கள், 15க்கும் மேற்பட்ட மொழி உச்சரிப்பு சார்ந்த கற்றல் தொடர்பான விஷயங்கள் இடம்பெற்றிருக்கிறது. மேலும், இதில் பென் டிரைவ் இணைத்துக்கொள்ளும் வசதி மற்றும் வேறு சாதனத்தின் ஒலியை புளூடூத் மூலம் இணைத்து இதில் கேட்கலாம். ஆக்ஸ் கேபிள் இணைப்புக்கான வசதியும் இதில் இருக்கிறதாம். மேலும் 3.5 எம்எம் ஜாக் இணைப்பு வசதியும் இருப்பதால், நீங்கள் ஹெட்போன் இணைத்தும் பயன்படுத்தலாம்.

”குட்டீஸ்களுக்கு ரைம்ஸ், கதை சொல்லும் புளூடூத் ஸ்பீக்கர்” – சரிகமா நிறுவனம் அறிமுகம்

இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 6 மணி நேரம் இதை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ள சரிகமா நிறுவனம், குட்டீஸ்கள் கையில் எளிதில் தாங்கிப்பிடிக்கும் வகையில் இதன் எடை வெறும் 250 கிராம் என்றளவில் தான் இருக்கும் என தெரிவித்துள்ளது. இதன் விலை 2 ஆயிரத்து 990 ரூபாய் ஆகும்.

  • எஸ். முத்துக்குமார்