’’நீங்கள் கேட்ட சேலைகள்…’’ – SALE வாட்ஸ் ஆப் குழுவினால் ஏமாந்துபோன 800 பெண்கள்

’’நீங்கள் கேட்ட சேலைகள்…’’ – SALE வாட்ஸ் ஆப் குழுவினால்  ஏமாந்துபோன 800 பெண்கள்

பேஸ்புக்கில் வரும் சேலை விளம்பரங்களை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருக்கும் பெண்களாக பார்த்து அவர்களின் செல்போன் நம்பரை கலெக்ட் செய்வதுதான் தாம்பரம் ராஜேந்திரனின் முழு நேர வேலையாக இருந்திருக்கிறது.

’’நீங்கள் கேட்ட சேலைகள்…’’ – SALE வாட்ஸ் ஆப் குழுவினால்  ஏமாந்துபோன 800 பெண்கள்

பின்விளைவுகளை பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் சமூக வலைத்தளங்களில் பெண்கள் தங்கள் செல்போன் எண்களை பதிவிட்டு விடுவதால், பின்னால் பல துன்பத்திற்கும் ஆளாகிறார்கள். ஆன்லைன் மூலமாக சேலை வாங்கும் மோகம் அதிகரித்துவிட்டதால், பேஸ்புக்கில் வரும் சேலை விளம்பரங்களை பார்க்கும் பெண்களின் செல்போன் நம்பரை கலெக்ட் செய்யும் தாம்பரம் ராஜேந்திரன், அவர்களின் செல்போனுக்கு ‘SALE ’ என்ற வாட்ஸ் அப் குரூப்பை அனுப்பி விடுகிறான். அதன்பிறகு அந்த குரூப்பில் டிசைன் டிசைன் சேலைகளாக காட்டி பெண்களை மயக்கி, பாதிக்கு பாதிதான் விலை என்று உதார் விட்டு, upi மூலமாக பணத்தை கட்டினால், கொரியரில் நீங்கள் கேட்டசேலைகள் வீட்டுக்கே வரும் என்று சொல்வதால், சேல் குரூப்பில் ஏகப்பட்ட பெண்கள் இருப்பதால், அந்த நம்பிக்கையினால் பணத்தை கட்டியிருக்கிறார்கள்.

’’நீங்கள் கேட்ட சேலைகள்…’’ – SALE வாட்ஸ் ஆப் குழுவினால்  ஏமாந்துபோன 800 பெண்கள்

பணம் அனுப்பிய அடுத்த நிமிசமே வாட்ஸ் ஆப்பில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள் பெண்கள்.
சென்னை புளியந்தோப்பை சேர்ந்த இந்திரா பிரகாஷ், தான் ஏமாந்தது குறித்துபோலீசில் புகார் தெரிவிக்கவும், போலீசாரின் அதிரடி விசாரணயில் அந்த நபர் தாம்பரம் ராஜேந்திரன் என்பதும், 800க்கும் மேற்பட்ட பெண்களிடம் இப்படி மோசடி செய்து வந்திருப்பதும் தெரியவந்தது.

’’நீங்கள் கேட்ட சேலைகள்…’’ – SALE வாட்ஸ் ஆப் குழுவினால்  ஏமாந்துபோன 800 பெண்கள்