• March
    28
    Saturday

Main Area

Main



முட்ட வந்த மாடு! ஸ்பைடர் மேன் போல் பாய்ந்து தப்பித்த இருவர்! வைரல் வீடியோ

bull
bull

சீறி வரும் மாட்டிடம் இருந்து பதறி ஓடி தப்பிக்கும் மனிதர்கள் போன்ற பல வீடியோக்களை நாம் இணையத்தில் பார்த்திருப்போம். அவற்றில் சில நமக்கு சிரிப்பை ஏற்படுத்துவதாய் இருக்கும். சில வீடியோக்கள் நெஞ்சை பதற  வைக்கும். நம்மூரில் நடக்கும் ஜல்லிக்கட்டில் கூட இது போன்ற வேடிக்கை சம்பவங்கள் பல நடக்கும். அப்படி ஒரு தரமான சம்பவம் தான் இது.

பெட்ரோல் பல்க்கில் பெட்ரோல் போடுவதற்காக இருவர் பைக்கில் வருகின்றனர்.  பின்னாடி இருப்பவர் எதோ ஆபத்து வருவதை உணர்ந்து திரும்பிபார்க்கிறார். அடுத்த நொடியே சூப்பர் மேன் போல் ஒரே பாய்ச்சலில் குதித்து தப்பிஓடுகிறார். முன்னாள் இருந்தவரும் வண்டியை அப்படியே போட்டுவிட்டு பறந்துவிட்டார். அப்புறம் பார்த்தால் மணிக்கு 100 மைல் வேகத்தில் ஒரு மாடு அவர்களை முட்டுவதற்கு வந்துள்ளது. அதை சுதாரித்த இருவர் புத்திசாலித்தனமாக தப்பித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

2018 TopTamilNews. All rights reserved.