அய்யோயோ... சித்தப்பாவுக்கு கோபம் வந்திடுச்சு: சரவணனைக் கலாய்க்கும் ரசிகர்கள்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainஅய்யோயோ... சித்தப்பாவுக்கு கோபம் வந்திடுச்சு: சரவணனைக் கலாய்க்கும் ரசிகர்கள்!

சரவணன்
சரவணன்

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3யில் சித்தப்பா என்று போட்டியாளர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் சரவணன். வந்த முதல் நாளில் இருந்து எதிலும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காமல் 'தான் உண்டு, தன் வேலை உண்டு' என்று வீட்டில் சுற்றி வருகிறார். அதனாலேயே இவர் வீட்டில் இருப்பதை ஹவுஸ் மேட்ஸ் பாதி நேரம் மறந்து விடுகின்றனர். 

இந்த நிலையில் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் எப்பவும் சாந்தமாக இருக்கும் நம்ப சித்தப்பாவுக்கு கோவம் வந்தது போல் காட்டப்டுள்ளது. திடீரென சரவணன், 'எல்லாத்துலயும் நான் participate பண்ணிட்டு இருக்கேன், ஒருத்தன் கூட எனக்கு சப்போர்ட் பண்ணி பேசவே இல்லை. எல்லாம் silent ஆகி நான் உள்ள போகட்டும் இருக்கீங்க.... என்றார்.  எப்பவும் சபையில் வாய் திறக்காத சாண்டி முதல் முறையாக வாய் திறந்து அவரை சமாதானம் செய்ய முன் வந்துள்ளார். 

இருப்பினும் அதை எல்லாம் காதில் வாங்கி கொள்ளாமல் அவர், 'எல்லாம் கிளம்புங்க, சித்தப்பா இல்லனு ஒருத்தன் கூட பார்க்கவே இல்ல, அசிங்க படுவீங்க போங்க... என்று ஆவேசமாகப் பேசுகிறார். இதை பார்த்த ரசிகர்கள் 'சித்தப்பாவுக்கு கோபம் வந்திடுச்சு' என்று நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர். 

chithapa

 

2018 TopTamilNews. All rights reserved.