சரத்குமாருக்கு வலை… செக் வழக்கால் செக் வைக்கிறதா அதிமுக?

 

சரத்குமாருக்கு வலை… செக் வழக்கால் செக் வைக்கிறதா அதிமுக?

இன்று தலைப்புச் செய்தியாக இடம்பிடித்தது சரத்குமாருக்கும் ராதிகாவுக்கும் விதிக்கப்பட்ட சிறை தண்டனை தான். சமூக வலைதளங்கள் எங்கும் பெரிதும் பேசுபொருளாகியிருக்கிறது இந்தத் தீர்ப்பு. அதிமுகவிலிருந்து வெளியேறியதற்காக தான் சரத்குமார் வழக்கு மூலம் கார்னர் செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. தற்போது சரத்குமார் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

சரத்குமாருக்கு வலை… செக் வழக்கால் செக் வைக்கிறதா அதிமுக?

நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இதை அரசியல் சூழ்ச்சி என்று கூறி நான் தப்பிக்க விரும்பவில்லை. சட்டத்தை மதிப்பவன் நான். என்னைப் பொறுத்தவரை இது சரியான தீர்ப்பு கிடையாது. இது செக் மோசடி வழக்கு கிடையாது. அதிமுக கூட்டணியில் இருந்து வெளிவந்ததற்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. அப்படி சொல்லி நான் நழுவ பார்க்கவில்லை. இதைச் சட்டரீதியாகத் தீர்த்துக்கொள்வோம்’’ என்றார்.

சரத்குமாருக்கு வலை… செக் வழக்கால் செக் வைக்கிறதா அதிமுக?

சரத்குமாரும் ராதிகாவும் பங்குதாரர்களாக இருக்கக்கூடிய மேஜிக் ப்ரேம் நிறுவனம் 2014ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்புக்காக ரேடியன்ஸ் நிறுவனத்திடமிருந்து 1.5 கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுவிட்டு, திருப்பிக்கொடுத்த காசோலைகள் பணமில்லாமல் திரும்பி வந்துவிட்டதாக சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆதாரங்கள் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் ஒரு வருடம் சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்தது. ஆனால் மேல்முறையீடு செய்யப் போவதாக சரத்குமார் கூறியதால், அவருக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது. ராதிகாவுக்கு கொரோனா என்பதால் ஆஜராக முடியவில்லை என்று கூறினாலும், அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது