சசிகலாவுடன் சரத்குமார் திடீர் சந்திப்பு!

 

சசிகலாவுடன் சரத்குமார் திடீர் சந்திப்பு!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவிருப்பதால் கூட்டணிக் கட்சிகள், பிரதான கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் தேமுதிக மற்றும் சமத்துவ மக்கள் கட்சிகள் கூட்டணியில் இருந்து பின்வாங்கப் போவதாகவே தகவல்கள் வெளியானது. தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் பேச்சும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரின் பேச்சும் இதை உறுதிப்படுத்தியது.

சசிகலாவுடன் சரத்குமார் திடீர் சந்திப்பு!

அதாவது, இரண்டுக்கு கீழ் தொகுதிகளை வழங்கும் கட்சியுடன் எல்லாம் வரும் தேர்தலில் கூட்டணி அமைக்க மாட்டோம். இப்போது வரை அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்போம் என அதிரடியாக பேசியிருந்தார். இதன் மூலம், அதிமுகவுடன் சரத்குமார் கூட்டணி அமைக்க மாட்டார் என்பது தெளிவாக தெரிகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர்.

சசிகலாவுடன் சரத்குமார் திடீர் சந்திப்பு!

இந்த நிலையில், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் சென்னை தி.நகரில் உள்ள சசிகலாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்திருக்கிறார். சரத்குமாரின் மனைவி ராதிகாவும் உடன் சென்றிருக்கிறார். அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் சரத்குமார், அதிமுகவுக்கு எதிரியாக பார்க்கப்படும் சசிகலாவை சந்தித்திருப்பது அரசியல் ரீதியாக உற்று நோக்கப்படுகிறது.