சரத்குமார் தலைமையில் உருவானது 3 அவது அணி! அதிமுகவுக்கு ஆபத்து!!

 

சரத்குமார் தலைமையில் உருவானது 3 அவது அணி! அதிமுகவுக்கு ஆபத்து!!

அதிமுக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் அதிமுக கூட்டணியில்தான் உள்ளன என முதல்வர் கூறியிருக்கிறார். ஆனால் இதுவரை அதிமுக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என பிரேமலதா புலம்பிவருகிரார். அதேபோல் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைத்த பிறகு தான் ஒரு முடிவுக்கு வரமுடியும் என சரத்குமார் தெரிவித்திருந்தார். தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டிய எடப்பாடி பழனிசாமி, கூட்டணி கட்சிகளை கண்டுக்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பாமகவை மட்டும் தன்னுடன் வைத்துக்கொள்ள நினைத்து இட ஒதுக்கீட்டை அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

சரத்குமார் தலைமையில் உருவானது 3 அவது அணி! அதிமுகவுக்கு ஆபத்து!!

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்து இந்திய ஜனநாயக கட்சியும் வெளியேறியது, இரண்டு கட்சிகளும் இணைந்து மாற்றத்திற்கான புதிய கூட்டணியை துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய ஜனநாயக கட்சி- சமத்துவ மக்கள் கட்சி இடையே கூட்டணி உறுதி ஆகியுள்ளது. இந்த கூட்டணிக்கு விஜயகாந்த், கமலும் வர வேண்டும் என சரத்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.