கட்சியைக் கலைத்துவிட்டு பா.ஜ.க-வில் இணைகிறார் சரத்குமார்! – பா.ஜ.க வட்டாரத்தில் மகிழ்ச்சி

 

கட்சியைக் கலைத்துவிட்டு பா.ஜ.க-வில் இணைகிறார் சரத்குமார்! – பா.ஜ.க வட்டாரத்தில் மகிழ்ச்சி

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கட்சியைக் கலைத்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியில் ஐக்கியமாவது என்று முடிவெடுத்துள்ளதாக பா.ஜ.க வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
நடிகர் சரத்குமார் அ.தி.மு.க ஆதரவாக இருந்தார். பிறகு ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக தி.மு.க-வில் இணைந்து எம்.பி-யானார். தயாநிதிமாறனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பிறகு தி.மு.க-வில் இருந்து விலகினார். அ.தி.மு.க ஆதரவு நிலைப்பாட்டோடு இருந்த அவர் சமத்துவ மக்கள் கட்சியை ஆரம்பித்தார். 2011 சட்டமன்ற தேர்தலில் அவர் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டன. 2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சின்னத்தில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

கட்சியைக் கலைத்துவிட்டு பா.ஜ.க-வில் இணைகிறார் சரத்குமார்! – பா.ஜ.க வட்டாரத்தில் மகிழ்ச்சிஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வுடன் இருந்த நெருக்கம் மறைந்துவிட்டது. அரசியலில் தனியாக சுற்றி வருகிறார் சரத்குமார். தற்போது அவருக்கு பா.ஜ.க-வில் வலைவிரிக்கப்பட்டுள்ளது. தமிழக பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்ற முருகன், மற்ற கட்சிகளில் உள்ள அதிருப்தி தலைவர்களை எல்லாம் பா.ஜ.க-வில் இணைக்கும் பணியை அமைதியாக செய்து வருகிறார்.

கட்சியைக் கலைத்துவிட்டு பா.ஜ.க-வில் இணைகிறார் சரத்குமார்! – பா.ஜ.க வட்டாரத்தில் மகிழ்ச்சிசரத்குமாருக்கும் மிகப்பெரிய விலை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை ஏற்றுக்கொண்ட சரத் குமார் கட்சியைக் கலைத்துவிட்டு பா.ஜ.க-வில் இணைவது என்று முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா பிரச்னை முடிந்த பிறகு மிக பிரம்மாண்டமான முறையில் இணைப்பு விழா நடத்த சரத்குமார், முருகன் திட்டமிட்டுள்ளதாக பா.ஜ.க வட்டாரங்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றன.