கொரோனா வார்டில் ஆய்வு மேற்கொண்டு அசத்திய முதல்வர் ஸ்டாலின்…சரத்குமார் பாராட்டு!

 

கொரோனா வார்டில் ஆய்வு மேற்கொண்டு அசத்திய முதல்வர் ஸ்டாலின்…சரத்குமார் பாராட்டு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் பிபிஇ கிட் அணிந்து சென்று ஆய்வு செய்ததற்கு பாராட்டுக்கள் தெரிவித்து, நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா வார்டில் ஆய்வு மேற்கொண்டு அசத்திய முதல்வர் ஸ்டாலின்…சரத்குமார் பாராட்டு!

அந்த பதிவில், “கொரோனா சிகிச்சை பிரிவில் பாதுகாப்பு கவச உடை அணிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆய்வு செய்ததில் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு பெரும் நம்பிக்கையும், ஊக்கமும் அளித்தது மட்டுமன்றி பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் செயல்பட்டதை வரவேற்கிறேன்.

கொரோனா பாதிப்பால் பெற்றோரில் ஒருவரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் பாதுகாப்புக்காக தலா 5 லட்சம் வங்கியில் வைப்புத்தொகை, கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை என நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் தேவையானபணிகளை செய்யும் தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் மனமார்ந்த பாராட்டுகள் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கோவையில் கொரனோ தடுப்புப் பணி குறித்து ஆய்வு செய்ய சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் உள்ள கொரனோ வார்டில் பிபிஇ கிட் அணிந்து திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்த பேரிடரிலிருந்து நாம் நிச்சயம் மீண்டு வருவோமென என்ற நம்பிக்கையை மருத்துவர்களுக்கும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் அளிக்கும் விதமாக, தான் கொரோனா வார்டுக்குள் சென்றதாக ஸ்டாலின் விளக்கம் அளித்திருந்தார்.

கொரோனா வார்டில் ஆய்வு மேற்கொண்டு அசத்திய முதல்வர் ஸ்டாலின்…சரத்குமார் பாராட்டு!

இந்திய வரலாற்றிலேயே ஒரு முதல்வர் கொரோனா வார்டுக்குள் சென்று ஆய்வு செய்வது இதுவே முதல் முறை. முதல்வர் ஸ்டாலினின் இந்த செயல் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ள நிலையில், சரத்குமார் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.