மூவரின் மூன்றாம் அணி… யாருக்கு எத்தனை சீட்டுகள்?

 

மூவரின் மூன்றாம் அணி… யாருக்கு எத்தனை சீட்டுகள்?

மூன்றாம் அணி என்று வந்துவிட்டாலே திமுக தொண்டர்கள் அலறிவிடுவார்கள். அந்தளவிற்கு ஓட்டுகளைச் சிதறடித்து திமுகவின் வெற்றிக்கனியைப் பறித்ததில் தேமுதிக தலைமையில் உருவான மூன்றாம் அணிக்கு அதிமுக்கிய பங்குண்டு. அப்படியிருக்கையில் இம்முறையும் மூன்றாவது அணி ஃபார்ம் ஆகிக் கொண்டிருக்கிறது. அது மக்கள் நீதி மய்யம் தலைமையில் உருவாகியிருக்கிறது.

மூவரின் மூன்றாம் அணி… யாருக்கு எத்தனை சீட்டுகள்?

திமுகவிலும் அதிமுகவிலும் அதிக செல்வாக்கில்லாத குறைந்தபட்ச வாக்கு வங்கியை மட்டுமே வைத்திருந்த பாரிவேந்தரின் ஐஜேகேவும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் பிரிந்தன. தனிச்சின்னத்தில் போட்டியிட மறுப்பு, குறைந்த தொகுதி என்ற காரணங்களுக்காக இரண்டு கட்சிகளும் வெளியேறின. அதன்பின் இரண்டு கட்சிகளும் இணைந்தன. இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து கமல்ஹாசனிடம் தஞ்சம் புகுந்தன. நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கமலிடம் போய்ச்சேர யாரும் விருப்பம் காட்டததால் இந்த இருவரையும் தனதாக்கிக் கொண்டார்.

மூவரின் மூன்றாம் அணி… யாருக்கு எத்தனை சீட்டுகள்?

நேற்று சமக சார்பில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில், முதல்வர் வேட்பாளாராக கமல்ஹாசனை முன்னிறுத்தி சரத்குமார் பேசியிருந்தார். அவருக்கு வேறு ஆப்சனும் இல்லை. ஏனெனில் தன்னுடன் யார் கூட்டணி அமைத்தாலும் நான் தான் முதல்வர் வேட்பாளர் என கமல் அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டார். அதனடிப்படையிலேயே சரத்குமார் முன்மொழிந்தார். அதனை ஐஜேகேவும் வழிமொழிந்தது.

மூவரின் மூன்றாம் அணி… யாருக்கு எத்தனை சீட்டுகள்?

தற்போது தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த சரத்குமாரும் ஐஜேகே நிர்வாகிகளும் கமலைச் சந்திக்கவிருக்கிறார்கள். இச்சந்திப்பு இன்னும் சில நிமிடங்களில் தொடங்கும். இதில் யார் யாருக்கு எத்தனை இடங்கள் என முடிவாகும் என்று கூறப்படுகிறது.