Home ஆன்மிகம் பேச்சு வரா குழந்தைகளுக்கு குரல் வளமளிக்கும் சிவஸ்தலம்... 'ஓசை கொடுத்த நாயகி அம்பிகை'!

பேச்சு வரா குழந்தைகளுக்கு குரல் வளமளிக்கும் சிவஸ்தலம்… ‘ஓசை கொடுத்த நாயகி அம்பிகை’!

பக்தர்களின் கனவில் சென்று கேள்வி கேட்ட அம்பிகை பற்றி கேள்விப்பட்டதுண்டா ? அப்படி ஒரு அம்பாள் விற்றிருக்கும் தலம் நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து ஒருகிலோ மீட்டர் தூரத்தில் அமைந்தள்ளது. அத்தலத்தின் பெயர் திருகோலக்கா என்பது ஆகும் .
விஷ்ணுவை திருமணம் செய்து கொள்ள வேண்டி இத்தலத்தில் மகாலட்சுமி தவம் செய்தார். அவரது வேண்டுகோளை ஏற்று சிவபெருமான் முன்நின்று மாகலட்சுமிக்கு விஷ்ணுவை மணம் முடித்து வைத்தார். எனவே இத்தலத்திற்கு திருகோலக்கா என்று பெயர் ஏற்பட்டது.

பேச்சு வரா குழந்தைகளுக்கு குரல் வளமளிக்கும் சிவஸ்தலம்... 'ஓசை கொடுத்த நாயகி அம்பிகை'!

பேச்சு வரா குழந்தைகளுக்கு குரல் வளமளிக்கும் சிவஸ்தலம்... 'ஓசை கொடுத்த நாயகி அம்பிகை'!

இத்திருதலத்து ஈசனை பிரம்மா, திருமால், லட்சுமி, இந்திரன், வருணன், எமன், அக்னி, வாயு, அகத்தியர், ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றனர் என்கிறது தலபுராணம் . ஆதிநாளில் அப்பகுதி கொன்றை மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததால் இங்குள்ள ஈசனுக்கு கொன்றைவனநாதர் என்ற திருநாமன் ஏற்பட்டது . அம்பாள் பெயர் அபிதகுஜம்பாள் என்ற திருநாமத்துடன் வணங்கப்பட்டார் . ஆனால் பின் இத்திருநாமங்கள் மாறிப்பேயின . காரணம் திருஞானசம்பந்தர் பெருமான் ஆவார்.

பேச்சு வரா குழந்தைகளுக்கு குரல் வளமளிக்கும் சிவஸ்தலம்... 'ஓசை கொடுத்த நாயகி அம்பிகை'!

சைவம் போற்றும் சமயக்குவர்கள் ஒருவரான திருஞானசம்பந்தர் முன்றாம் வயதிலேயே அம்பிகையின் ஞானப்பால் அருந்தி தேவாரம் பாட்த்தொடங்கினார் . சீர்காழியை அடுத்து அவர் தனது சிவதரிசன யாத்திரையை தொடங்கி முதலில் சென்ற திருத்தலம் தான் இந்த திருகோலக்கா.

 

சீர்காழியில் ‘தோடுடைய செவியன்’ என்ற பதிகம் பாடத் தொடங்கி, ஈசனின் இறையருள் கைவரப் பெற்ற சம்பந்தர் திருக்கோலக்கா திருத்தலம் வந்து அங்கு உறையும் ‘கொன்றைவன நாதரை வணங்கி வழிபட்டு , ஈசன் சன்னிதியின் முன்பாக நின்று, தனது சின்னஞ்சிறு கைகளை தட்டி கைத் தாளம் போட்டுக் கொண்டே இறைவனைத் துதித்து பதிகம் பாடத் தொடங்கினார்.

பேச்சு வரா குழந்தைகளுக்கு குரல் வளமளிக்கும் சிவஸ்தலம்... 'ஓசை கொடுத்த நாயகி அம்பிகை'!

‘மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்
உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ’
என்று தொடங்கும் பதிகத்தை பாடிக்கொண்டிருந்த 3 வயது சிறு குழந்தையான ஞானசம்பந்தரின் பிஞ்சுக் கைகள் தாளமிட்டதன் காரணமாக சிவந்து போயின. பிஞ்சு கைகள், சிவக்க சிவக்க கைத்தாளம் போட்டு பதிகம் பாடும் குழந்தையை நினைத்து அகமகிழ்ந்தார் சிவபெருமான். ‘சம்பந்தரின் கை வலிக்குமே’ என்ற எண்ணத்தில் அவருக்கு உதவ முடிவெடுத்தார். அதன்படி ஈசன் பிரதட்சண்யமாக நேரில் தோன்றி சம்பந்தருக்கு ‘நமசிவாய’ என்ற பஞ்சாட்சரம் எழுதப்பெற்ற பொற்றாளத்தை கொடுத்தருளினார். ஆனால் அதுபொற்றாளம் என்பதால் ஒலி எழுப்பவில்லை. உடனடியாக இத்தலத்தில் வீற்றிருக்கும் அன்னையான அபிதகுசாம்பாள், அந்த பொற்றாளத்திற்கு ஓசை கொடுத்தார்.

பேச்சு வரா குழந்தைகளுக்கு குரல் வளமளிக்கும் சிவஸ்தலம்... 'ஓசை கொடுத்த நாயகி அம்பிகை'!
சம்பந்தருக்கு பொற்றாளம் கொடுத்து அருளியதால், அன்று முதல் இத்தல ஈசன் ‘திருத்தாளமுடையார்’ என்றும், ‘சப்தபுரீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படலானார். அதே போல் பொற்றாளத்திற்கு ஓசை வழங்கிய அம்பிகை ‘ஓசை கொடுத்த நாயகி’ என்றும், ‘தொனிபிரதாம்பாள்’ என்றும் பெயர் பெற்றார்.

சுந்தரமூர்த்தி நாயனார் இத்தலம் வந்த போது பாடிய திருமுறைப் பதிகத்தில், சம்பந்தர் இங்குள்ள ஈசனிடம் பொற்றாளம் பெற்ற நிகழ்வை பதிவு செய்திருப்பது இந்நிகழ்வுக்கு சான்றாகவுள்ளது . தனது பதிகத்தில் ‘ நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு, உலகவர்முன் தாளம் ஈந்தவனை, கோலக்காவினிற் கண்டு கொண்டேனே ‘ என்று போற்றிப்பாடுகிறார் சுந்தரமூர்த்தி நாயனார்.

 

தற்போது ஓசை கொடுத்த நாயகி அம்பிகைக்கு 2 சிலைகள் உள்ளது.
முன்பிருந்த பழைய அம்மன் சிலையில் சிறிது சேதம் ஏற்படவே, அதனை ஊர் மக்கள் மாற்றி விட்டு புதிய சிலையை பிரதிஷ்டை செய்தனர் அன்றிரவே ஊர் மக்கள் கனவில் செனற அம்பாள் , ‘உங்கள் வீட்டில் யாருக்கேனும் உடலில் ஊனம் ஏற்பட்டால் அகற்றி விடுவீர்களா?’ எனக் கேட்க, தங்கள் தவறை உணர்ந்த மக்கள், பழைய சிலையை கருவறை அருகே தனிச் சன்னிதியில் வைத்து பூஜிக்கத் தொடங்கி விட்டார்கள். அந்த அம்பாளை பழைய அம்மன் என்றும் , புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட அம்பாளை புதிய அம்மன் என்றும் அழைக்கிறார்கள். கருவறையில் எழுந்தருளி இருப்பவர். பழைய ஓசை கொடுத்த நாயகி அம்மன், கருவறையின் முன்மண்டபத்தில் வடபுறமாய் தனி சன்னிதியில் எழுந்தருளி இருப்பவர் புதிய ஓசை கொடுத்த நாயகி அம்மன் .

 

திருபேச்சு வரா குழந்தைகளுக்கு குரல் வளமளிக்கும் சிவஸ்தலம்... 'ஓசை கொடுத்த நாயகி அம்பிகை'!க்கோலக்கா ஆலயத்தில் பொன் தாளத்தை கையில் வைத்திருக்கும் சம்பந்தரின் உற்சவ விக்கிரகம் வெகு நேர்த்தியாகவும், அழகாகவும் உள்ளது.

பேச்சு வரா குழந்தைகளுக்கு குரல் வளமளிக்கும் சிவஸ்தலம்... 'ஓசை கொடுத்த நாயகி அம்பிகை'!

பேச்சு வராத குழந்தைகளை அழைத்து வந்த இத்தலத்து ஈசனை வழிபட்டால் பிரச்சனை தீரும் . திருத்தாளமுடையாரையும் ஒசை கொடுத்த நாயகியையும் நம்பிகையுடன் வணங்க வழிபட பேச குழந்தைகள் பேசம் . திக்கு வாய் முதலான பிரச்சனைகளும் நிவர்த்தியாகும் . திருகோலக்கா ஈசனருளால் பேச்சு வரபெற்று பலன் அடைந்தவர்கள் கோவிலில் உள்ள பதிவேட்டில் தங்கள் பெயரையும், ஊரையும் பதிவு செய்துள்ளனர் ஈசனுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.
‌திக்குவாய் உள்ளவர்கள், பிறந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் பேச்சு வராத குழந்தைகள் இந்த திருதாளமுடையாருக்கு ‘அஷ்டோத்திர அர்ச்சனையும்’, ஓசை கொடுத்த நாயகிக்கு ‘வாக்வாதினி அர்ச்சனை’யும் செய்தால் கைமேல் பலன் என்கின்றனர் பக்தர்கள் . 2 லிட்டர் தேனை அம்பாளுக்கு நிவேதனம் செய்து, அந்தத் தேனை வாய் பேச முடியாதவர்களின் நாவில் தேய்த்து, ‘மடையில் வாளை பாய’ என்ற சம்பந்தரின் தேவாரப் பதிகத்தை தினமும் பாடிவர உடனடி பலன் கிடைக்கிறது. ஒசை கொடுத்த நாயகி உடனாய திருத்தாமுடையர் ஈசன் பேச்சு திறன் அளிப்பது மட்டுமின்றி தன்னை வழிபடுவோருக்கு சகல நலன்களையும் அருள்பவராக உள்ளார் . நாமும் வணங்குவோம் நலன்பல பெறுவோம்.

-மு.ரா.சுந்தரமூர்த்தி

பேச்சு வரா குழந்தைகளுக்கு குரல் வளமளிக்கும் சிவஸ்தலம்... 'ஓசை கொடுத்த நாயகி அம்பிகை'!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

ஆக்சிஜன் விநியோகத்திற்கு… முருகானந்தம் தலைமையில் குழு அமைப்பு

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனால், ஆக்சிஜன் கொள்முதல் செய்யும்...

“சீக்கிரம் ரெட் அலர்ட் அறிவிக்க வேண்டும்” – அவசர அவசரமாக ஸ்டாலினை அலர்ட் செய்த எம்பி!

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. குறிப்பாக...

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் ரஜினிகாந்த்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கான ஒரே வழி தடுப்பூசி தான் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அதனால் மக்கள் அனைவரும்...

இனிமே வீடியோ வெளியிட மாட்டேன்: என் வயசு பொண்ணுகளும் வீடியோ வெளியிட வேணாம்.. ’2k கிட்ஸ்’ சிறுமி

ஒரு வருடத்திற்கு மேலாக பள்ளிகள் இயங்காததால் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருவதால் மாணவ, மாணவிகள் செல்போனிலும் இணையங்களிலும் மட்டுமே மூழ்கி இருக்கின்றனர். பாட நேரம் போக மற்ற நேரங்களிலும்...
- Advertisment -
TopTamilNews